For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி பராமரிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிசிசிஐ கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள, லோதா கமிட்டியே ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. அதை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Lodha panel to appoint independent auditor on BCCI finances

இந்த உத்தரவை இன்னமும் பிசிசிஐ அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலையில் அதுகுறித்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை விசாரித்துவரும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு பைசாவை கூட தரக்கூடாது என்றும், பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி ஆடிட்டர்களை நியமித்து கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிதி விவகாரங்களை லோதா கமிட்டியே இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

English summary
The Supreme Court today said that the Justice R M Lodha Committee will appoint an independent auditor to scrutinise the BCCI’s contracts. The court also ordered that the BCCI should not release funds until the state associations file an affidavit implementing the Lodha panel recommendations. The court which had reserved its verdict also ordered BCCI president, Anurag Thakur to give an undertaking to comply with the recommendations of the Lodha Panel. Hearing on the matter has been adjourned next to December 5.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X