For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் முடிவு.. தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்கு கிடைத்த 45 கோடி விசிட்!

Google Oneindia Tamil News

டெல்லி: 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையத்தின் இணையதள சேவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே கிராஷ் ஆகி விட்டது. ஆனால் இந்த முறை அருமையாக இணையதளம் செயல்பட்டது. அதை விட முக்கியமாக அன்றைய தினம் 45 கோடி விசிட்கள் இந்த இணையதளத்திற்குக் கிடைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த விசிட்கள்தான் இவை. மேலும் இணையதளமும் எந்த வகையிலும் கிராஷ் ஆகாமல் சிறப்பாகவும் செயல்பட்டது.

இதுவரை இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு இணையதளமும் ஒரு நாளில் இவ்வளவு அதிகமான விசிட்களைச் சந்தித்ததில்லை என்பதால் இது ஒரு சாதனையாகவும் மாறியுள்ளது.

குழு போட்டு வேலை செய்த ஆணையம்

குழு போட்டு வேலை செய்த ஆணையம்

கடந்த முறை போல இந்த முறையும் சர்வர் கிராஷ் ஆகி விடாமல் தடுப்பதற்காக ஒரு டெக்னிக்கல் குழுவையே தனியாக நியமித்து செயல்பட்டது ஆணையம்.

ஆணையத்துக்கு 5 பேர்

ஆணையத்துக்கு 5 பேர்

மாநிலங்களில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தலா 5 பேர் கொண்ட குழுவும், டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் 12 பேர் கொண்ட குழுவும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இம்ப்ரஸ் பண்ணிட்டாங்களே...

இம்ப்ரஸ் பண்ணிட்டாங்களே...

இந்தக் குழுவினர் தேர்தல் முடிவுகள், முன்னணி நிலவரங்கள் எந்தவகையான இடையூறும் இல்லாமல் லைவ் ஆக போவதை உறுதி செய்தனர்.

16ம் தேதி காலை முதல்

16ம் தேதி காலை முதல்

16ம் தேதி காலை 6 மணி முதல் இந்தக் குழுக்கள் இயங்கத் தொடங்கினவாம். அடுத்த நாள் மாலை 6 மணிவரை இவர்கள் தொடர்ந்து செயல்பட்டுள்ளனர்.

989 மையங்கள்

989 மையங்கள்

நாடு முழுவதும் வாக்குகளை எண்ண அமைக்கப்பட்ட 989 மையங்களை ஒருங்கிணைத்து இந்தக் குழு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுக்குரியதுதான்....

English summary
Unlike in 2009 when it crashed within minutes, it was a smooth operation this time when the Election Commission website recorded 45 crore (450 million) hits on the morning of the vote count on Friday, making it the highest number of hits on any Indian website ever in a single day. Unable to sustain the "excessive" hits last time, the Commission's website had crashed on the same day five years ago when votes were counted in the last Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X