For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

91 தொகுதிகள்.. 18 மாநிலம்.. 2 யூனியன் பிரதேசம்.. பல கோடி வாக்காளர்கள்.. அசர வைக்கும் தேர்தல் டேட்டா

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

    டெல்லி: லோக்சபா தேர்தல் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் இந்த தேர்தலில் பல ஆச்சர்யமான விஷயங்கள் அடங்கி உள்ளது.

    இன்று நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெறுகிறது. எங்கெங்கு தேர்தல் நடக்கிறது என்பது குறித்த முழு விபரம் பின்வருமாறு.

    Lok Sabha Election 2019: Data details of First Phase election and 4 states assembly elections

    மாநிலங்கள்: மொத்தம் 18 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடக்கிறது. அதேபோல் 2 யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

    எத்தனை தொகுதிகள்: நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடக்கிறது.

    எங்கு நடக்கிறது: ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்திலும் சில தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

    சட்டசபை தேர்தல்: ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    இடங்கள் விவரம்: ஆந்திராவில் 25, தெலுங்கானாவில் 17, உத்தர பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்கரில் 1, காஷ்மீரில் 2, மகாராஷ்டிராவில் 7, சிக்கிம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுராவில் தலா 1 தொகுதியிலும், மேகாலயாவில் 2, ஒடிசாவில் 4 இடங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது

    எத்தனை பேர்: இந்த முதற்கட்ட வாக்குபதிவில் 1,300 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பாதுகாப்பு: நாடு முழுக்க அசம்பாவிதங்களை தவிர்க்க 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    English summary
    Lok Sabha Election 2019: Full Data details of First Phase election and 4 states assembly elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X