For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்.. நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு.. 9 மாநிலங்களில் தேர்தல்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 71 தொகுதிகளில் நாளை நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கும்.

லோக்சபா தேர்தல் திருவிழா தற்போது முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. நாடு முழுக்க முதல் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 303 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தலில் பெரிய அளவில் கலவரமோ, புகாரோ தெரிவிக்கப்படவில்லை.

Lok Sabha Election 2019: Nine states will go voting tomorrow in the fourth phase

பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. நாடு முழுக்க இன்னும் 240 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் நாளை நான்காம் கட்டமாக 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி ஒடிசாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க உள்ளது. பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ராஜஸ்தானில் 13 இடங்களில் தேர்தல் நடக்கிறது.

உத்தரபிரதேசத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு நான்காவது கட்டமாக தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நாளை நடக்கிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது. ஜார்கண்டில் 3 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் நாளை தேர்தலை சந்திக்கிறார்கள். மஹாராஷ்டிராவில் 17 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இந்த லோக்சபா தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. மாலை 6 மணி வரை லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

English summary
Lok Sabha Election 2019: Nine states will go voting tomorrow in the fourth phase of the grand election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X