For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் உரிமை, என் கடமை: தள்ளாத வயதிலும் கடமையை செய்த மூத்த குடிமகன்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: தள்ளாத வயதிலும், மூத்த குடிமகன் ஒருவர் கம்பியை ஊண்டியபடி நடந்து வந்து கூச்பெக்கர் தொகுதியில் வாக்களித்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

நாட்டில் 91 மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்திலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் கூச்பெக்கர், அலிபுர்தூராஸ் உள்ளிட்ட இரணடு மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

Lok Sabha Election 2019: Senior citizen voters cast their vote at a polling booth in WBs Coochbehar

பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர! பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்.. ஆந்திராவில் பரபர!

இங்குதான் நாட்டிலேயே அதிகபட்சமாக 20.1லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இன்றைக்கு அவர்களின் உரிமையும், கடமையும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் மேற்கு வங்கத்தில் இன்று நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கூச்பெக்கர் நகரில், 90வயதை தாண்டிய முதியவர் ஒருவர் யாருடைய துணையும் இன்றி ஊனமுற்றோருக்கான கம்பியை ஊண்டிய படி தள்ளாடிய நிலையிலும் மனஉறுதியுடன் வாக்களிக்க வந்தார்.

வரிசையில் நின்று இருந்த வாக்காளர்கள், அவரை பார்த்த உடன், அவரை வாக்குச்சாவடிக்கு உள்ளே அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர். தள்ளாத வயதிலும் தனது கடமையை நிறைவேற்றியுள்ள அந்த மூத்த குடிமகன், நாட்டில் உள்ள முதல் தலைமுறை வாக்களர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்தனர்.

English summary
lok sabha elections 2019: West Bengal Senior citizen voters cast their vote at a polling booth in Coochbehar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X