For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தலை பார்க்க இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்!

By Siva
|

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை பார்க்கும் ஆசையில் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். தேர்தலை பார்க்க அவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதி துவங்கியது. வரும் மே மாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் தேர்தலை பார்க்க அமெரிக்கா, பிரான்ஸ், நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.

அதன் விவரவங்களை பார்ப்போம்.

வெளிநாட்டவர்

வெளிநாட்டவர்

பல வெளிநாட்டவர்கள் தேர்தலை பார்க்க 6 இரவு 7 பகல் டூர் பேக்கேஜிற்கு ரூ. 72 ஆயிரத்து 117 கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்களை பார்ப்பது, அரசியல் தலைவர்களை சந்திப்பது மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திப்பதும் இந்த பேக்கேஜில் அடக்கம்.

வாரனாசி

வாரனாசி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் செட்டிலான குஜராத்தியர்கள் வாரனாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியும், ஆம் ஆத்மிகட்சி தலைவர் கெஜ்ரிவாலும் போட்டியிடுவதை பார்க்க ஆவலாக உள்ளனர்.

வெயில்

வெயில்

இந்தியாவில் அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது தேர்தலை பார்க்க இதுவரை 800 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து ஏராளமானோர் நாடாளுமன்ற தேர்தலை காண இந்தியா வருகின்றனர்.

English summary
As the poll juggernaut rolls on, tourists from countries like the US, France, Nigeria and UAE have decided to witness the rough-and-tumble of polls in the world's largest democracy, especially the keen contest in the holy city of Varanasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X