For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் முடிவுகள் live: சிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் இன்று பதவியேற்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!

    டெல்லி: நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார்.

    மக்களவைத் தேர்தலில் பாஜக 350தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கூறினார். இந்நிலையில் வரும் 30ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பதவியேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

    Newest First Oldest First
    7:49 AM, 27 May

    டெல்லி

    முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை.முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீதுஅன்சாரி உள்ளிட்டோரும் அஞ்சலி
    7:48 AM, 27 May

    டெல்லி

    தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேர்தல், வாக்கு எண்ணிக்கை முடிவு நிறைவடைந்த நிலையில் நாடுமுழுவதும் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
    7:27 AM, 27 May

    சென்னை

    திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு. சட்டசபையில் சபாநாயகர் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர்.
    12:13 PM, 26 May

    தமிழகம்

    ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஜெயிக்க மோடி உதவி. என் தோல்வி உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகாரம் மற்றும் பணபலத்தால் தோற்கடிக்கப்பட்டேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
    11:57 AM, 26 May

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியுடன் சந்திப்பு
    8:27 AM, 26 May

    டெல்லி

    ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
    9:23 PM, 25 May

    ஆட்சியமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு

    டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று வரும் 30ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் என தகவல்
    9:11 PM, 25 May

    டெல்லி

    டெல்லி: 17வது மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. வரும் 30ம் தேதி 2 வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி
    9:02 PM, 25 May

    ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

    டெல்லி: மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அமித் ஷா கடிதம் வழங்கினார் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார் அமித் ஷா
    7:49 PM, 25 May

    காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் உருக்கம்

    டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தால், தென்மாநிலங்களில் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு.
    6:56 PM, 25 May

    ஆந்திரா

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு. 30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா.
    6:54 PM, 25 May

    டெல்லி

    டெல்லி
    முதல்முறையாக எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நரேந்திர மோடி வாழ்த்து. யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம் என்றார்.
    6:54 PM, 25 May

    டெல்லி

    டெல்லி
    புதிய இந்தியாவை உருவாக்க இனிதான் துவக்கம். 2019 -ல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளதாக நரேந்திர மோடி பேச்சு
    6:53 PM, 25 May

    சென்னை

    மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
    6:39 PM, 25 May

    டெல்லி

    பாஜக கூட்டணி கட்சியினர் மத்தியில் நரேந்திர மோடி உரை, புதிய கடமைகளை நிறைவேற்ற தயாராக உள்ளேன்- மோடி பேச்சு
    பாஜக கூட்டணி கட்சியினர் மத்தியில் நரேந்திர மோடி உரை, புதிய கடமைகளை நிறைவேற்ற தயாராக உள்ளேன்- மோடி பேச்சு
    6:37 PM, 25 May

    சென்னை

    சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட செயலாளர்கள், மக்களவை, சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு.
    6:33 PM, 25 May

    டெல்லி

    குடும்ப அரசியல் அல்லாத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி தலைவராக மோடியை தேர்வு செய்ததற்கு நன்றி என்று அமித்ஷா பேசினார்.
    6:25 PM, 25 May

    சென்னை

    திமுக மக்களவை எம்.பிக்கள் குழுவின் கொறடாவாக ஆ. ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டிகே.எஸ் இளங்கோவன் தேர்வு.
    6:16 PM, 25 May

    டெல்லி

    பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி, மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
    6:14 PM, 25 May

    சென்னை

    சென்னை
    திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
    6:07 PM, 25 May

    டெல்லி

    பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
    6:05 PM, 25 May

    கொழும்பு

    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மோடி வரும் 30-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். கடந்த 2014-ல் மோடி, பிரதமராக பதவி ஏற்றபோது அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    6:04 PM, 25 May

    டெல்லி

    மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, இன்று இரவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    5:59 PM, 25 May

    டெல்லி

    பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்
    5:57 PM, 25 May

    கொழும்பு

    நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மோடி வரும் 30-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். கடந்த 2014-ல் மோடி, பிரதமராக பதவி ஏற்றபோது அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
    5:45 PM, 25 May

    மேற்குவங்கம்

    தேர்தல் விதிமீறல் குறித்த புகாரை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை - மம்தா புகார் மேற்குவங்கத்தில் எனது அரசை செயல்படவிடவில்லை பாஜக அரசு முதல்வர் பதவியிலிருந்து விலக போவதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறினேன் - மம்தா பானர்ஜி
    5:44 PM, 25 May

    டெல்லி

    டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளனர்.
    5:44 PM, 25 May

    சென்னை

    திமுக எம்.பி.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் துவங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் பங்கேற்பு திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்
    3:23 PM, 25 May

    டெல்லி

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்று அக்கட்சி செயற்குழு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்வியையடுத்து ராகுல் காந்தி பதவி விலக தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில் தீர்மானம்.
    2:33 PM, 25 May

    டெல்லி

    16வது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று 16வது மக்களவையை குடியரசு தலைவர் கலைத்துள்ளார்.
    READ MORE

    Modi will take oath as PM of the nation on 30th May at 7pm: President Ramnath Govind
    English summary
    Modi will take oath as PM of the nation on 30th May at 7pm says President of India Ramnath Govind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X