For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரா மக்கள் ஜெகனை தேர்வு செய்ய என்ன காரணம்.. மொத்தமாக காலி செய்யப்பட்ட நாயுடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election Results 2019 : ஆந்திரா: 2 தேர்தல்களிலுமே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை- வீடியோ

    அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25க்கு 25 மக்களவை தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. சந்திராபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை ஆந்திரமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

    ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.

    தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கு இடையே நம்மூர் கமல்ஹாசனை போல் அங்கு பவண் கல்யாணும் தனித்து களம் கண்டார்.

    மொத்தமாக முன்னிலை

    மொத்தமாக முன்னிலை

    இதனால் அங்கு யார் வெல்வார் என்ற போட்டி கடுமையாக நிலவியது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25க்கு 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    சிஎம் ஆகிறார் ஜெகன்

    சிஎம் ஆகிறார் ஜெகன்

    சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மொத்தம் உள்ள 175 இடங்களில் 141 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்குதேசம் 26 இடங்களில்முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மக்களவை தொகுதியில் வென்று கிங்மேக்கராக மாறிய ஜெகன், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஆந்திர முதல்வராகவும் பதவியேற்கிறார். வரும் 30ம் தேதி ஆந்திரா முதல்வராக ஜெகன் பதவியேற்கிறார்.

    கடும் பாதிப்பு

    கடும் பாதிப்பு

    ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு காரணம், ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கேட்டு மிகப்பபெரிய போராட்டங்கள் நடத்தியது முதன்மையான காரணம். தெலுங்கானாவில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஹைதராபாத் தெலுங்கானா வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வருவாய் ரீதியாக ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைநகர் அமராவதி வளரும் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திராவில் கோரிக்கை இருக்கிறது.

    ஜெகன் தேர்வு

    ஜெகன் தேர்வு

    இது தவிர ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் அளவுக்கு பாதையாத்திரை சென்று மக்களை சந்தித்தும் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆந்திர மக்கள் தங்கள் குறைகளை நேரில் வந்து கேட்ட ஜெகனை தேர்வு செய்துவிட்டனர்.

    English summary
    lok sabha election results 2019 live updates: Jagan Mohan Reddy's YSRCP crosses 120 in Andhra Pradesh Assembly Election Result 2019
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X