For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் பரவிய காவி கொடி.. முடிகிறது மமதாவின் சகாப்தம்.. பெரும் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Results 2019: மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை- வீடியோ

    கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. யாரும் நினைக்காத அளவிற்கு பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டுள்ளது.

    பாஜக தனித்தே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை மொத்தமாக தாண்ட வாய்ப்புள்ளது.

    ராஜஸ்தானில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை.. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ்!! ராஜஸ்தானில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை.. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ்!!

    மேற்கு வங்கம்

    மேற்கு வங்கம்

    அதேபோல் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு இருக்கும் 42 இடங்களில் 19 இடங்களில் பாஜகதான் முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    பாஜக மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அளவில் தனது கணக்கை தொடங்கி இருக்கிறது என்று கூறலாம். மேற்கு வங்கத்தில் பாஜக நான்காவது கட்சியாக இருந்தது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வந்தது.

    தற்போது இல்லை

    தற்போது இல்லை

    ஆனால் தற்போது அங்கு கம்யூனிஸ்ட் கட்சியை, பாஜக பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அங்கு தற்போது கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அங்கு முன்னிலை பெறவில்லை.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    அதே சமயம் மேற்கு வங்கத்தில் பாஜக 20 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியே இல்லாமல் இருந்த மமதாவின் சகாப்தம் இதனால் முடிய போகிறது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Lok Sabha Elections Results 2019: Bengalis Gave a shock to Mamata Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X