For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசியில் அவரும் ஜெயிக்க போகிறார்.. இனி எங்களுக்கு என்ன கவலை.. சந்தோசத்தில் பாஜக!

லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி தொடந்து முன்னிலை வகித்து வருகிறது.

Google Oneindia Tamil News

போபால்: லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சி தொடந்து முன்னிலை வகித்து வருகிறது. அங்கு பாஜக கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சில வேட்பாளர்கள் தேர்தலில் முன்னிலை வகித்து வருகிறார்கள்.

ஒரு வழியாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தலில் பதிவு செய்யப்பட வாக்குகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகிறது.

தேர்தல் முடிவுகள் இதுவரை வந்தது எல்லாம் பாஜக கட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. ஆனாலும் பாஜக கட்சி சந்தோசம் அடையும் அளவிற்கு மத்திய பிரதேசத்தில் நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது.

ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி கோஷத்திற்கிடையே நன்றி தெரிவித்த மோடி தாய்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி ஹர ஹர மோடி, ஜெய் ஜெய் மோடி கோஷத்திற்கிடையே நன்றி தெரிவித்த மோடி தாய்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் 29 இடங்கள் உள்ளது. இன்று சென்ற தேர்தலின் போது பாஜக 27 இடங்களை வென்றது. ஆனால் இந்த முறை அதையும் தாண்டி உள்ளது. இந்த முறை 28 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இது அக்கட்சிக்கு பெரிய சந்தோசத்தை அளித்துள்ளது.

பிரக்யா சிங் தாக்குர்

பிரக்யா சிங் தாக்குர்

ஒரே ஒரு தொகுதியில்தான் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. லோக்சபா தேர்தலில் மத்திய பிரதேசத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் வெற்றியை நோக்கி சென்று இருக்கிறார். இவர் தொடர்ந்து காலையில் இருந்து முன்னிலையில் வகித்து வருகிறார்.

யார் இவர்

யார் இவர்

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்குர். சில நாட்களுக்கு முன்தான் இவர் பாஜகவில் இணைந்தார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

வெளியில் வந்தார்

வெளியில் வந்தார்

இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது தேர்தலில் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

இந்த தேர்தல் முழுக்க இவர் சர்ச்சைகளை மட்டுமே பேசி வந்தார். முக்கியமாக கோட்சேவை தேச பக்தி மான் என்று குறிப்பிட்டார். ஆனால் கடைசியில் தற்போது இவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் நிலைக்கு சென்று இருக்கிறார். பாஜகவை இந்த வெற்றி பெற குஷியில் தள்ளி உள்ளது.

English summary
Lok Sabha Elections Results 2019: Pragya Thakur's leading give happiness to BJP party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X