For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் ஆத்மியின் 4வது வேட்பாளர் பட்டியல்- இன்போசிஸ் பாலகிருஷ்ணன் பெங்களூரில் போட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தனது 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 61 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பாலகிருஷ்ணனுக்கும் இதில் சீட் தரப்பட்டுள்ளது.

Lok Sabha polls 2014: AAP releases fourth list of 61 candidates

இன்று டெல்லியில் தனது 4வது லோக்சபா தேர்தல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது. இதில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் 2 பேரும், ஹரியானாவில் 4, பஞ்சாபில் 3, கர்நாடகத்தில் 13, உ.பியில் 39 வேட்பாளர்களை ஆம் ஆ்த்மி அறிவித்தது.

இன்றைய வேட்பாளர்களில் முக்கியமானவர் இன்போசிஸ் பாலகிருஷ்ணன். இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். தனது பதவியை ராஜினாமா் செய்து விட்டு ஆம் ஆத்மிக்கு வந்தவர்.

இதேபோல டெஹல்கா பத்திரிக்கையாளர் ஆசிஷ் கேத்தன், புதுடெல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு டெல்லி வேட்பாளராக கர்னல் தேவேந்தர் ஷெராவத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை ஆம் ஆத்மி கட்சி 131 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

English summary
Aam Aadmi Party (AAP) on Monday released its fourth list of candidates 61 for the 2014 Lok Sabha elections. The party has announced two candidates from Delhi, four from Haryana, three from Punjab, 13 from Karnataka and 39 from Uttar Pradesh, a party functionary said. Some of the prominent names in the AAP's fourth list are- V Balakrishnan, who stepped down as the Chief Financial Officer (CFO) of Infosys on December 31, 2013 to join AAP, Tehelka journalist Ashish Khetan from New Delhi constituency, Col Devender Sehrawat from south Delhi constituency and satirist Bhagwant Mann from Sangrur in Punjab.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X