For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் நிதிஷின் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு மரண அடி

By Mathi
|

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகாலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வந்தது. கடந்த ஆண்டுதான் அக்கூட்டணியை விட்டு வெளியேறியது.

Lok Sabha polls: BJP set to dethrone JD-U

பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிட்டது. ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி, பாஜக அணியில் இணைந்தது. இங்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதளமும் காங்கிரஸும் களமிறங்கின.

பாஜக கூட்டணிக்கு 28

40-ல் பாஜக கூட்டணி பாஜக 22, ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி 6 இடங்களை கைப்பற்றியுள்ளன.

லாலுவுக்கு 3

லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 3 இடங்கள். இதில் அவரது மகள் மிசா பாரதி போட்டியிடும் பாடலிபுத்திரா தொகுதியும் ஒன்று.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2

ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 2 தொகுதிகள்தான். ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் தோற்றால் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று அலறிக் கொண்டிருந்தவர் நிதிஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸுக்கு 2

இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

English summary
Chief minister Nitish Kumar was in for a major setback in Bihar as the ruling Janata Dal-United appeared to be heading for a disastrous performance. Poll trends indicated that the party was leading in only 3 out of the 40 seats in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X