For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச்- ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த காங்கிரஸ் முடிவு?

By Mathi
Google Oneindia Tamil News

Loksabha polls may be in March-April?
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிர்பாராத நெருக்கடி உருவாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களே மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் தீவிர லாபியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விரைவில் தேர்தலை எதிர்கொள்வது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

இதனால் நடப்பு நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தை பிப்ரவரி மாதத்தின் இறுதியில் நடத்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

கடந்த 2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 16- மே 13 வரையிலான கால கட்டத்தில் நடைபெற்றது. மே 16-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அதற்கு முன்பு 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் மே 10ந் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது. மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைப் போலவே அடுத்த ஆண்டும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவான நாடாளுமன்ற கூட்டத்தை நிறைவு செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது.

English summary
The fractious 15th Lok Sabha, marked by UPA-opposition clashes over cases of corruption in high places like 2G, Commonwealth Games and Coalgate, will meet for the last time in mid or end-January to pass a vote on account, clearing the way for Lok Sabha elections by late March or early April.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X