For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து- மத்திய அரசிடம் 1 பில்லியன் டாலர் கோரும் லூப் டெலிகாம் முதலீட்டாளர்!!

By Mathi
Google Oneindia Tamil News

Spectrum
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் 1 பில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக மத்திய அரசு தர வேண்டும் என்று லூப் டெலிகாமின் முதலீட்டாளரான மொரீஷியஸை சேர்ந்த கெய்தான் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கெய்தான் ஹோல்டிங், லூப் டெலிகாம் நிறுவனத்தில் 26.95% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு 21 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லூப் டெலிகாமின் 21 உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. லூப் நிறுவனத்துக்கு ரூ1,454.94 கோடி செலுத்தியிருப்பதால் தங்களுக்கு இந்த தொகையைத் திருப்பி தர வேண்டும் என்று மத்திய அரசுடன் கெய்தான் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சர்வதேச வர்த்தக விதிகளின் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய மத்திய அரசு 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Loop Telecom's investor Khaitan Holdings (Mauritius) Limited (KHML) has filed international arbitration against the Indian government, seeking damages of over $1 billion for 2G licences in which it had invested and were cancelled by Supreme Court on February 2, 2012. KHML holds 26.95 per cent stake in Loop Telecom whose all 21 telecom 2G licences were cancelled by apex court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X