For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'லூஸ் ஸ்க்ரூ': கிளம்பிய இடத்திற்கே திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்- 175 பயணிகள் உயிர் தப்பினர்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் என்ஜினில் ஸ்க்ரூ ஒன்று லூஸாக இருந்ததால் விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பியது.

ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று 175 பயணிகளுடன் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதே விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மும்பைக்கு கிளம்பியது. விமானம் கிளம்பியவுடன் அதன் என்ஜினில் பிரச்சனை இருப்பது விமானிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி வந்து பத்திரமாக தரையிறக்கினார்.

Loose screw in engine, flight back

முதலாவது என்ஜினின் எரிபொருள் பம்பை திங்கட்கிழமை பழுதுபார்த்துள்ளனர். பழுது பார்த்த பிறகு எரிபொருள் பம்பில் இருக்கும் நான்கு ஸ்க்ரூக்களில் ஒன்றை என்ஜினியர்கள் சரியாக பொருத்தவில்லை. அதனால் மறுநாள் விமானத்தை கிளப்பியபோது ஸ்க்ரூ ஒன்று லூஸாக இருந்ததால் என்ஜினுக்குள் அழுத்தம் ஏற்படவில்லை.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானம் டெல்லிக்கே திரும்பி வந்தது. பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற சூழ்நிலைகளை கையாள எங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். எரிபொருள் கசிவு எதுவும் ஏற்படவிலல்லை என்றார்.

English summary
A Mumbai bound SpiceJet Flight returned to Delhi after some issue with the engine. Later it was found out that a screw was loose in the engine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X