For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடவுளே இது சாத்தான்களின் பூமியாக இருக்கிறதே.. மரணத்திற்கு முன்பு அமெரிக்கர் எழுதிய பரபரப்பு கடிதம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்டினல் தீவில் அமெரிக்கர் உயிரிழப்பிற்கு யார் மீது தவறு?- வீடியோ

    போர்ட் பிளைர்: கடவுளே இது சாத்தான்களின் பூமியாக இருக்கிறதே என அந்தமான் ஆதிவாசிகளால் கொல்லப்படுவதற்கு முன்பு அமெரிக்கர் எழுதியுள்ளார்.

    அந்தமானில் உள்ளது சென்டினல் என்ற குட்டி தீவு. இந்த தீவுகளுக்கு கடந்த ஆண்டு வரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த தீவுகளுக்கு சுற்றுலா செல்ல மத்திய அரசு தடையை விலக்கியது.

    இதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஜான் சாவ் (26) என்ற மத போதகர் அந்த தீவுகளுக்கு சென்றிருந்தார். அப்போது அவர் ஆதிவாசிகளால் கொல்லப்பட்டார். இவர்கள் வெளியுலக தொடர்பை விரும்பாதவர்கள். ஆதிவாசிகளால் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு டைரியில் சிலவற்றை எழுதியுள்ளார்.

    கிறிஸ்துவர்கள்

    கிறிஸ்துவர்கள்

    அந்த டைரியில் அவர் எழுதியது குறித்து அவரது தாய் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சென்டினல் தீவுகளில் உள்ள ஆதிவாசிகளை கிறிஸ்துவர்களாக மத மாற்றம் செய்வதற்காக சென்றபோது எனக்கு பயமாக இருந்தது.

    கொடுக்கவில்லை

    கொடுக்கவில்லை

    சூரியன் மறைந்தது மிகவும் அழகாக இருந்தது. ஆனால் அதுதான் நான் பார்க்கும் கடைசி சூரியன் அஸ்தமனமாக இருக்கும். கடவுளே இதென்ன சாத்தான்களின் பூமியா. ஒருவரும் உங்களது பெயரை கேட்கவோ அதை கூறுவதற்கு வாய்ப்போ கொடுக்கவில்லை என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஆலன் தாயிடம்

    ஆலன் தாயிடம்

    மேலும் அவர் 13 பக்கங்களை எழுதியுள்ளார். அதில் பேனாவிலும் பென்சிலிலும் மாறி மாறி எழுதியுள்ளார். அந்த டைரியை அவரை அந்த தீவுகளுக்கு கொண்டு சேர்த்த மீனவர்களின் படகிலேயே விட்டு விட்டார். அதை அவர்கள் ஜானின் தாயிடம் ஒப்படைத்தனர்.

    ஆலன் தகவல்

    ஆலன் தகவல்

    அந்த டைரியில் படகு பயணம் குறித்து ஜான் விவரிக்கையில் கடலோர காவல் படை மற்றும் ரோந்து போலீஸாரிடம் இருந்து கடவுள்தான் எங்களை மறைத்தார் என்று குறிப்பு எழுதியிருந்தார். இதுபோன்று சிக்கலில் தனது நண்பர்களை சிக்கவிட தான் விரும்பாததால் தான் மட்டும் இங்கு வந்துள்ளதாக படகில் மீனவர்களிடம் ஜான் தெரிவித்துள்ளார்.

    மீண்டும் செல்ல ஆலன் முடிவு

    மீண்டும் செல்ல ஆலன் முடிவு

    அந்த தீவுகளுக்கு சென்று இறங்கியதுமே ஒரு சிறிய வேட்டையாடும் கும்பல் அவரை பார்த்துவிட்டது. அதிலிருந்து ஒரு இளைஞர் ஜானின் கையில் இருந்த தண்ணீர் புகாத பைபிளில் அம்பு எய்தினான். தான் கடவுளின் கருவி என்பதால் தீவுக்கு மீண்டும் செல்ல ஆலன் முடிவு செய்தார்.

    4-ஆவது முறை

    4-ஆவது முறை

    இதன் பின்னர் அவரை அம்புகளால் எய்து கொன்ற ஆதிவாசிகள் அவரது உடலை இழுத்து சென்று மணலில் போட்டு மூடியுள்ளனர். இதை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் பார்த்துள்ளனர். இவர் இதுவரை அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 4 முறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "Lord, is this island Satan's last stronghold where none have heard or even had the chance to hear your name?" John Allen Chau wrote in a diary of his last days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X