For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடா பழத்திற்கு பெயர் "கமலம்".. ஆனால் அரசியல் இல்லீங்க.. குஜராத்தில் கலகல!

Google Oneindia Tamil News

காந்திநகர் : தாமரை வடிவ டிராகன் பழ வகைக்கு கமலம் (தமிழில் அர்ததம் தாமரை) என குஜராத் அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஆனால் இந்த முடிவில் அரசியல் ஏதும் இல்லை என முதல்வர் விஜய் ரூபானி மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று துவக்கி வைத்தார். பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், டிராகன் பழகத்திற்கு அந்த பெயர் பொருத்தமானதாக இல்லை. அதனால் அதற்கு கமலம் என பெயர் சூட்ட குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இப்போது முதல் இந்த பழம் கமலம் என அழைக்கப்படும் என்றார்.

 Lotus-shaped Dragon Fruit renamed as Kamalamin Gujarat

மேலும், டிராகன் என்ற பெயர் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. கமலம் என்ற சொல், சமஸ்கிருத சொல். இந்த பழம் தாமரை வடிவத்தை கொண்டுள்ளதால் கமலம் என அழைக்க முடிவு செய்துள்ளோம். இதில் அரசியல் ஏதும் இல்லை. இந்த பெயரை வைக்க வேண்டும் என யாரும் சொல்லவில்லை என நீண்ட விளக்கத்தை அளித்தார்.

தாமரை, பாஜக.,வின் சின்னம் என்பதை தாண்டி பாஜக.,வின் அடையாளமாக மாறி உள்ளது. காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கூட ஸ்ரீ கமலம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் முதல்வர் அளித்துள்ள விளக்கம் ஏற்கப்படுவதாக இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

English summary
Gujarat Govt Renames 'Lotus-shaped' Dragon Fruit as 'Kamalam'. CM Vijay rupani said, there's nothing political about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X