For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம்.. மத்திய அரசு புதிய மூவ்.. பின்னணி காரணம் இதுதான்!

தற்போது வழங்கப்பட்டு வரும் இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தற்போது வழங்கப்பட்டு வரும் இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாஸ்போர்ட் சமீப நாட்களாக மிக எளிதாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இருந்த சமயத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டது.

மிக எளிதாக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் பாஸ்போர்ட்டில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டது.

முட்டாள் ராவணன்.. வீடியோவில் பேசிட்டிருக்கும்போதே.. திடீரென திட்ட ஆரம்பித்த நித்யானந்தா! முட்டாள் ராவணன்.. வீடியோவில் பேசிட்டிருக்கும்போதே.. திடீரென திட்ட ஆரம்பித்த நித்யானந்தா!

இந்திய பாஸ்போர்ட்

இந்திய பாஸ்போர்ட்

இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டு வரும் இந்திய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து வழங்கப்பட்டு வரும் பாஸ்போர்ட்களில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

பாஜக சின்னம்

பாஜக சின்னம்

தாமரை என்பது பாஜக கட்சியின் சின்னம் ஆகும். ஒரு கட்சியின் சின்னத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட்டில் வைப்பது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இது தொடர்பாக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டில் புதிதாக சின்னங்கள் இடம்பெறுவது பாதுகாப்பை அதிகரிக்கும். இது போலி பாஸ்போர்ட் அச்சடிக்கப்படுவதை தடுக்க உதவும்.

ஏன் தாமரை

ஏன் தாமரை

தாமரை தேசிய சின்னம் என்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற தேசிய சின்னங்களும் பாஸ்போர்ட்டில் இடம்பெறும். ஒவ்வொரு மாதமும் இந்த சின்னங்கள் மாற்றி மாற்றி அச்சிடப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Lotus simple printed in New Indian Passports: External Ministry gives security explanations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X