For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசில் அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் விலை அதிரடி குறைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு, கடந்த நான்கு வருடங்களில் அனைவருக்கும் ஆரோக்கிய வசதி என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக செயல்பட்டுள்ளது.

மருந்து விலை ஒழுங்கமைப்பு மொத்தம் 92 வகை மருந்துகள் உச்சபட்ச விலையை நிர்ணயித்துள்ளது இதில் ஹெப்படைடிஸ் சி ஒற்றைத் தலைவலி சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளும் அடங்கும்.

Low cost medicines & devices bring new lease of life

தேசிய மருந்து விலை ஆணையம் கூறுகையில், 72 ஷெட்யூல் வகை மருந்துகளுக்கு சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 9 மருந்துகளின் சில்லரை விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது மேலும் 11 ஷெட்யூல் மருந்துகளுக்கு சில்லறை விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி நிலவரப்படி, பிரதான் மந்திரி பாரதிய ஜனுசக்தி பரியோஜனா, திட்டத்தின் கீழ், 3214 மையங்கள் மொத்தம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக குறைந்த விலை ஜெனரிக் மருந்துகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இதை திட்டத்தின் கீழ் 700 மருந்துகள் 154 அறுவை சிகிச்சை உபகரணங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதய அறுவை சிகிச்சைக்கான ஸ்டென்ட் விலை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரண உலோக ஸ்டென்ட் 7 ஆயிரத்து 260 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. DES வகைகள் அதிகபட்சமாக 29 ஆயிரத்து 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து கொள்ள முடியும். 2017-18ம் ஆண்டு ஆண்டறிக்கைப்படி, முன்பு ஸ்டென்ட்கள் விலை முறையே ரூ.45,100 மற்றும் ரூ.121,400 என்ற விலையில் இருந்தன. இதன் மூலம், முறையே 85 சதவீதம் மற்றும் 74 சதவீதம் அளவுக்கு ஸ்டென்ட்கள் மீது விலை குறைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மக்களுக்கு இதனால், ஆண்டுக்கு சுமார் ரூ.4,450 கோடி சேமிப்பு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஆண்டுக்கு ஒன்று முதல் ஒன்றரை லட்சம் மூட்டு மாற்று சிகிச்சைகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு மூட்டு சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி வரை சேமிக்க முடியும்.

மூட்டு சிகிச்சை வகைகள் முன்பு சராசரி செலவு சராசரி விலை குறைவு புதிய விற்பனை விலை

கோபல்ட் க்ரோமியம்
ரூ.1,58,324 65% ரூ.54,720
டைட்டானியம் &
ஆக்சிடைசிடு ஜிர்கோனியம்
ரூ.2,49,251 69% ரூ.76,600
உயர் நெகிழ்வு இம்ப்ளான்ட் ரூ.1,81,728 69% ரூ.56,490
ரிவிசன் இம்ப்ளான்ட்ஸ் ரூ.2,76,869 59% ரூ.1,13,950

புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கான சிறப்பு இம்ப்ளான்ட்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,113,950 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

English summary
The Narendra Modi government has taken bold steps to offer affordable healthcare to common people of the country. The Modi government has walked the talk of 'Affordable, Quality Healthcare for All'. Drug price regulator NPPA has fixed the ceiling price for 92 drug formulations, including those used for treatment of cancer, hepatitis C, migraine and diabetes among others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X