For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும

Google Oneindia Tamil News

டெல்லி: அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவமழையும் பொய்த்துப் போனது இதனால் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

Low depression formed in Bay of Bengal near Andaman

போதிய அளவு மழை இல்லாததால் ஏரி,குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. வடகிழக்குப் பருவமழையும் தமிழகத்தில் முடிந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் அந்தமான் அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக டெல்லி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணிநேரத்தில் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது காற்றின் போக்கை வைத்து, போகபோகத்தான் தெரியும்.

English summary
Indian meteorological center says that Low depression formed in Bay of Bengal near Andaman islands. After 48 hours this depression will become strong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X