For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: பாஜக கூட்டணியில் இணைகிறார் பாஸ்வான்?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி இணைய திட்டமிட்டுள்ளது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதை அடுத்து லோக்சபா தேர்தல் நடத்துவது குறித்த ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தேர்தல் கூட்டணி வியூகம் அமைப்பது குறித்து பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றன.

LS polls: Ram Vilas Paswan's LJP to tie up with BJP

இந்நிலையில் தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இத்தகவலை லோக் ஜன சக்தி கட்சியின் மூத்த தலைவர் சூரஜ்பான், பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ்-லாலு ஆகியோர் கூட்டணி பாஸ்வானுக்கு உரிய இடம் தராததால் இந்த மிரட்டலை பாஸ்வான் தரப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் பாஸ்வானின் மகன் கூறுகையில், பாஜக கூட்டணியில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இறுதி முடிவை எனது தந்தை தான் என்றார்.

English summary
With the Lok Sabha elections just two months away, Ram Vilas Paswan's Lok Janshakti Party has decided to cement alliance with the Bharatiya Janata Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X