For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெருவோர வயதான வியாபாரியை அறைந்த லக்னோ டிஐஜி - வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

லக்னோ: உத்திர பிரதேசத்தில் தெருவோரத்தில் வியாபாரம் செய்து வந்த வயதானவர் ஒருவரை டிஐஜி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் தெருவில் வியாபாரம் செய்த வயதானவரை காவல்துறை டிஐஜியான டிகே சவுத்ரி கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து சவுத்ரிக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதேபோன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லக்னோவில் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலையோரமாக அமர்ந்து மனு தயாரித்து கொடுக்கும் தொழிலை செய்துவந்த கிருஷ்ண குமார் என்பவரை அப்பகுதி காவல் துணை ஆய்வாளர் சந்தீப் குமார், டைப் ரைட்டர் இயந்திரத்தையும் ஷூ காலால் எட்டி உதைத்து, உடைத்து சேதப்படுத்தினர்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தச் சம்பவம் முதல்வர் அகிலேஷ் யாதவின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து அந்த உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் முதியவர் கிருஷ்ணகுமாருக்கு உடனடியாக ஒரு புதிய டைப் ரைட்டர் வாங்கித்தருமாறும் அவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The Deputy Inspector General of Lucknow has been caught on camera abusing and slapping a street vendor. The video of the incident has gone viral on social media embarrassing the Uttar Pradesh Government and the State Police department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X