For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காசியபாத் அருகே லக்னோ ரயில் தடம் புரண்டு விபத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் அருகே லக்னோ மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு இன்று காலையில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.

காசியாபாத் ரயில் நிலையம் அருகே லக்னோ மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி. பெட்டிகள் 3 தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டன.

ரயில் விபத்து குறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறியதாவது: "இன்று காலை 6.20 மணிக்கு லக்னோ மெயில் காசியாபாத் வந்தடைந்தது. என்ஜினில் இருந்து 7-வதாக இணைக்கப்பட்டிருந்த பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம்புரண்ட மூன்று பெட்டிகளும் ரயிலில் இருந்து நீக்கப்பட்டு ரயில் டெல்லி புறப்பட்டுச் சென்றது. விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை" என்றார்.

English summary
One coach of Delhi-bound Lucknow Mail derailed at the Ghaziabad Railway Station on Monday morning. Passengers had a narrow escape as one wheels of an AC-3 coach of the train derailed even as the train was pulling out of the station after a brief stop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X