For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் கணவரின் தலையில் அன்போடு "கை" வையுங்கள் மனைவியரே!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கரம் ஒட்டி வந்த நபர்களை பிடித்து வழக்கம்போல அபராதம் விதிக்காமல் பிடிபட்ட எல்லோருக்கும் அழகிய ஹெல்மெட் வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அந்த ஹெல்மெட்டை அவர்கள் தலையில் அணிவிக்க யாரைக் கூப்பிட்டார்கள் தெரியுமா. அவரவர் வீட்டுக்கு அழைத்து அவர்களின் மனைவியை நேரடியாக அந்த இடத்துக்கு வரவழைத்து அவர்களின் மனைவியின் கையாலேயே அந்த ஹெல்மெட்டை அணியச் செய்திருக்கின்றனர் காவல் துறையின் அழகு சிந்தனை கொண்ட அசத்தல் போலீஸ்காரர்கள் .

Lucknow police's novel idea to wear Helmet

இந்த அசத்தலான முயற்சியை அவர்கள் செய்ததது, இல்லத்தரசிகள் தங்கள் கணவர்களின் நல்வாழ்வுக்காக விரதம் இருந்து வேண்டிக் கொள்ளும் "கர்வ சவுத்" என்ற பாரம்பரிய நாளில் என்பது இன்னும் விசேஷமானது.

இந்திய .தேசிய சாலை மற்றும் நெடுஞ்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015 ஆம் ஆண்டை விட 2016 இல்தான் இரு சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் ஆகியிருக்கிறது என்று தெரிவிக்கிறது. அதில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்திலேதான் அதிக விபத்துக்கள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட் போடுங்கள் என்று எவ்வளவோ கட்டாயப்படுத்தி அரசு சட்டங்கள் இட்டு வலியுறுத்தியும் ஹெல்மெட் போடாமல் இருசக்கரத்தில் பயணம் செய்வதை இன்னும் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படியே சிகனலில் டிராபிக் போலீசில் மாட்டினாலும் லஞ்சம் கொடுத்தோ அல்லது அபராதம் கட்டி விட்டோ நகர தொடங்குகின்றனர் .

அதனால் காற்றாட ஹெல்மெட் இல்லாமல் சவுகரியமாக பயணம் செய்கிறேன் என்று அசால்டாக பயணம் செய்வது ஒருவேளை நம்மை காற்றோடு காற்றாக கலக்க செய்துவிடும் என்ற புரிதலோடு வண்டி ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிய மறக்கும் அல்லது மறக்கும் கணவன்மார்களுக்கு அன்பாக ஹெல்மெட் அணிந்து வழி அனுப்பிவையுங்கள் மனைவியரே என்றும் நமக்கு இது சொல்லத் தோன்றுகிறது.

- Inkpena சஹாயா

English summary
Lucknow police made defaulters to wear helmet in a novel way recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X