For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணத்தால் சிவப்பாக மாறிய நிலா.. பூமிக்கு அருகே வந்த செவ்வாய் .. வானில் ஒரு அற்புதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சந்திர கிரகணத்தால் செந்நிறமாக தோற்றமளித்த நிலவும், பூமிக்கு அருகே நெருங்கி வந்த செவ்வாய் கிரகமும் அருகருகே வானில் தென்பட்ட அரிய நிகழ்வு இன்று நடந்தேறியது.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர் கோட்டில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது வந்து விழும். இதுவே சந்திரக் கிரகணம். சில நேரங்களில் சந்திரன் சரியான நேர் கோட்டில் வராததால் முழுமையான சந்திரகிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திரன், பூமி, மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்தித்ததால் முழு சந்திரகிரகணம் நிகழ்ந்தது.

Lunar Eclipse 2018: Blood Moon and Mars comes together

ஜூலை 27 வெள்ளிக்கிழமை 11.54 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், இன்று அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடித்தது. அதாவது மொத்தம் 1 மணி நேரம், 43 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் வானில் தோன்றியது.

அதைத் தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடைகிறது. இதுதான் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாகும். மொத்த நிகழ்வும் சுமார் 4 மணி நேரம் நீடித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி, ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும், முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு களித்தனர்.

ரத்த சிவப்பு வண்ணத்திற்கு நிலவு மாறிய அரிய காட்சியை போட்டோக்களாக எடுத்தனர். இதே தினத்தில் இன்னொரு அரிய நிகழ்வாக, செவ்வாய் கிரகமும் பூமியும் அக்கம் பக்கமாய் வந்ததால் சந்திரனுடன் செவ்வாய் கிரகமும் தெளிவாகத் தெரிந்தது. சந்திரன் பெரிதாகவும், செவ்வாய் கிரகம் நட்சத்திரம் போலவும் தெரிந்தது.

இதை போட்டோ எடுத்த நெட்டிசன்கள், அதை இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

English summary
The so-called "blood moon," when it turns a deep red, is visible at different times in Australia, Africa, Asia, Europe and South America. When the sun, Earth and moon line up perfectly, Earth's shadow is cast on the moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X