For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7வது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை!

7வது முறையாக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்று சாதனை படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

64வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

 Lyricst Vairamuthu has received the National Award 7 times in his career so far.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்தில் வரும் எந்தப் பக்கம் பாடலுக்காக வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 7வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார். எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.

இதற்கு முன்பு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி முதல் மரியாதை படத்தின் அனைத்து பாடல்களுக்காக வைரமுத்துவுக்கு முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக் காற்று ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து. தற்போது தர்மதுரை படத்தில் வரும் எந்தப் பக்கம் பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

English summary
He won the awards for Muthal Mariyathai,Roja,Karuthamma,Sangamam, Kannathil Muthamittal, Thenmerku Paruvakatru now he got enthapakkam songs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X