For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிய விளையாட்டில் தங்கம்: குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு ம.பி. முதல்வர் வாழ்த்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

போபால்: ஆசியவிளையாட்டுப்போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்க்கு மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வாழ்த்து கூறியுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியின் குத்துச்சண்டை (48-51 கி.கிராம்) எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

M.P Chief Minister Sivaraj singh Congratulates Mary kom

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்திய வீராங்கனை மேரி கோம், தென்கொரியாவின் ஹைகோவ் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் நேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மேரி கோம் தனது அபார திறனால், 48 கிலோ எடைப் பிரிவிலான இறுதி ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் மியாங் சிம்மை வீழ்த்தினார்.

விறுவிறுவிப்பான இந்த ஆட்டத்தில் கிம் மியாங் தந்த சவாலை சாதுர்யமாக எதிர்கொண்டு போராடி வெற்றி பெற்ற மேரி கோம்,ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் முதல் தங்க பதக்கம் பெற்றவர் ஆவார்.

மேரி கோம்க்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துக்குறிப்பில், ‘‘தற்போது நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று உலகளவில் இந்திய பெண்கள் திறமையை நிருபித்த மேரி கோமுக்கு என்னுடைய நன்றி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்'' என்று கூறியுள்ளார்.

English summary
Thank you Mary Kom for #AsianGames2014 Gold & showing to the world that women from India are second to none. Congratulations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X