For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு

போபாலில் 5000 பாகிஸ்தான் அகதிகளுக்கு தடுப்பூசி போடப்படும் என ம.பி. அரசு கூறியுள்ளது

Google Oneindia Tamil News

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் தொற்றுநோய் பாதிப்பு அதிகமானதையடுத்து, மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது..

அந்த வகையில் இந்தூர் மாவட்டம்தான் மிக அதிக அளவு தொற்று பாதித்த பகுதியாக இருந்தது.. இதையடுத்து இங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது..

கொரோனா தடுப்பூசி போட்டதால் காந்த சக்தி அதிகரிச்சுருச்சாம்.. உடம்பில் ஒட்டுதாம் இரும்பு பொருட்கள் கொரோனா தடுப்பூசி போட்டதால் காந்த சக்தி அதிகரிச்சுருச்சாம்.. உடம்பில் ஒட்டுதாம் இரும்பு பொருட்கள்

 மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

1,370 பேர் இதுவரை இந்த மாவட்டத்தில் இறந்துள்ளனர்.. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனவே, இந்த மாவட்டத்தில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.. அவர்களில் 2.35 லட்சம் பேர் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டு, நலமாக இருக்கிறார்கள்.

 சிந்து காலனி பகுதி

சிந்து காலனி பகுதி

இந்நிலையில், தங்களுக்கும் தடுப்பூசி வேண்டும் என்று இந்தூர் பகுதியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை வைத்தனர்... மத்தியபிரதேசத்தின் இந்தூரில், இந்து சிந்தி சமூக மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.. இவர்கள் எல்லாரும் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்கள்.. இங்கு இவர்களுக்காகவே சிந்தி காலனி பகுதி என்றே தனியாக உள்ளது.. அதில்தான் வசித்து வருகின்றனர்.

 தொற்று பயம்

தொற்று பயம்

இவர்களுக்கும் தொற்று பயம் பீடித்துள்ளதால், "எங்கள் சமூகத்தின் பிரதிநிதிகள், தங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்" என்று மாவட்ட நிர்வாகத்திடம் இவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து, அகதிகளின் இந்த கோரிக்கையை அதிகாரிகள் முதல்வர் அலுவலக கவனத்துக்கு கொண்டு சென்றார்... முதல்வர் அலுவலகமும் இதற்கு ஒப்புதல் தந்துவிட்டது..

 அடையாள அட்டை

அடையாள அட்டை

பாகிஸ்தானிய அகதிகள், தங்களின் பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாக காட்டி, இந்தூர் நகர கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை பற்றி ஒரு அதிகாரி சொல்லும்போது, "வயது வந்த எல்லாருக்குமே நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் தடுப்பூசி போட்டு வருகிறோம்... கடந்த மாதம், இந்தூருக்கு வந்திருந்த ஒரு நெதர்லாந்து நாட்டு பயணிக்குகூட தடுப்பூசி போட்டுள்ளோம்" என்றார்.

English summary
Madhya pradesh 5000 Pakistani refugees to get covid 19 in Indore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X