For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு காலத்தில் டான்.. இப்போது டண்டணக்கா டான்.. ம.பியில் பாஜகவிற்கு ஏற்பட்ட கதியை பாருங்கள்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ம.பி.யில். காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி

    போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை பெற்று முன்னிலை வகிக்கிறது.

    தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் நடந்த தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. ஐந்து தேர்தலிலும் பாஜக மோசமாக மண்ணை கவ்வியுள்ளது.

    முக்கியாக மத்திய பிரதேசத்தில் பாஜக பெரிய தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. பாஜகவை அம்மாநில மக்கள் முற்றிலுமாக நிராகரித்தது கீழ்காணும் விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

    15 வருடமாக ஆண்டு வருகிறது

    15 வருடமாக ஆண்டு வருகிறது

    பாஜக 15 வருடமாக மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்து வருகிறது. குஜராத்தை விட மத்திய பிரதேசம்தான் பாஜகவின் ஸ்ட்ராங் சோன். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் பாஜக முதல்வர்கள்தான் 15 வருடம் கோட்டையை அலங்கரித்தது.

    இப்போது ஏன்

    இப்போது ஏன்

    ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. இப்போது அங்கு வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் 120 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் மெஜாரிட்டி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் அளவுக்கு முன்னணி பெற்றுள்ளது.

    சென்ற தேர்தல்

    சென்ற தேர்தல்

    சென்ற முறை 2013ல் நடந்த தேர்தலின்படி பாஜக அங்கு அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. 230 இடங்களில் 165 இடங்களை பாஜக வென்றது. காங்கிரஸ் வெறும் 58 இடங்களில் மட்டும் வென்றது. பகுஜன் சமாஜ் வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 3 சுயேட்சைகள் வென்றனர்.

    மோசமான வேறுபாடு

    மோசமான வேறுபாடு

    இந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சென்ற முறையைவிட பாஜக இப்போது 66 இடங்கள் குறைவாக பெற்றுள்ளது. மாறாக காங்கிரஸ் 62 இடங்கள் அதிகம் வென்றுள்ளது. இந்த இமாலய வேறுபாடுதான், இந்த 62 இடங்களில் பெற்ற வெற்றிதான் காங்கிரஸ் கட்சியின் அசாத்திய வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளது.

    English summary
    Madhya Pradesh Assembly Election: BJP gets very less number of seats compared to 2013 amidst Congress gets 62 new seats.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X