For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம.பியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு.. இரவே ஆளுநரை சந்திக்க திட்டம்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் மிகவும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை. இதில் இப்போதுவரை காங்கிரஸ் பாஜக இரண்டு கட்சிகளும் மெஜாரிட்டி பெறுவதற்கான இடங்களில் வெற்றிபெறவில்லை.

Madhya Pradesh Assembly Election: Congress decides to stake claim to form Govt

தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில், பாஜக 109 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 114 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. இதற்காக இன்று இரவே ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீலை சந்திக்க அனுமதி கேட்டு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சைகள் ஆதரவு இருப்பதாக கமல்நாத் தெரிவித்துள்ளார். ஆகையால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஆளுநர் உடனடியாக காங்கிரஸ் உறுப்பினர்களை சந்திக்க மறுத்துவிட்டார். தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிவித்தே பின்பே ஆட்சி அமைப்பது குறித்து யோசிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

English summary
Congress Leader Kamal Nath writes to Madhya Pradesh governor seeking appointment to stake claim to form Govt in Madhya Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X