For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி முதல்வர் யார்?.. ராகுலிடம் முடிவை விட்டது காங்கிரஸ்

மத்திய பிரதேச முதல்வரை ராகுல் காந்தியே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச முதல்வரை ராகுல் காந்தியே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேற்று காலையில் இருந்து தேர்தலில் வெற்றிபெறுவோமா மாட்டோமா என்ற தலைவலி இருந்தது. இன்று காலை வரை மெஜாரிட்டி கிடைக்குமா கிடைக்காதா, ஆளுநர் நம்மை அழைப்பாரா மாட்டாரா என்ற குழப்பம் இருந்தது.

Madhya Pradesh Assembly Election: Congress holds a meeting to choose CM for the state

இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது அங்கு வெற்றிபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில், 230 தொகுதியில் பாஜக 109 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 114 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் துணையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அங்கு புதிய தலைவலி உருவானது. அங்கு முதல்வர் யார் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய முடியாமல் திணறியது.

காங்கிரஸ் கட்சியில், மத்திய பிரதேச முதல்வராவதற்கு இரண்டு பேர் ரேஸில் இருந்தனர். ஒன்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரும், எம்,பியுமான கமல்நாத். இவர்தான் நேற்றே மத்திய பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பாட்டீலை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்.

மத்திய பிரதேசத்தில் கமல் நாத் முதல்வராக அதீத ஆர்வத்துடன் இருந்தார். இவருக்கு 60 சதவிகித காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.

அதே சமயம் காங்கிரஸ் கட்சி சார்பாக அங்கு ஜோதிராதித்ய சிந்தியாவும் முதல்வர் ரேஸில் இருந்தார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பே காங்கிரஸ் சார்பாக மத்திய பிரதேச முதல்வராக தயார் என்று கூறினார். இவருக்கும் கணிசமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் காங். எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர். முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இதில் விவாதித்தனர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நடந்தது.

இந்த சந்திப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள், கமல்நாத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். 70 சதவிகிதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் கமல்நாத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். அதேபோல் ஜோதிராதித்ய சிந்தியாவும் கமல்நாத்தை முதல்வராக நியமிக்க பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதைதடுத்து மத்திய பிரதேச முதல்வரை ராகுல் காந்தியே தேர்வு செய்யலாம் என்று காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English summary
Madhya Pradesh Assembly Election: Congress holds a meeting to choose CM for the state. They have to choose someone between Kamal Nath and Jyotiraditya Scindia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X