For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிசிடிவி இல்லை.. 2 நாள் கழித்து வந்த இவிஎம் மிஷின்.. ம.பி தேர்தலில் குளறுபடியா? அதிர்ச்சி!

மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு தேர்தல் முடிந்து இரண்டு கழித்து தாமதமாக கொண்டு வரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் முடிந்து 2 நாட்கள் கழித்து பாதுகாப்பு அறைக்கு வந்த இ.வி.எம். மெஷின்

    போபால்: மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு தேர்தல் முடிந்து இரண்டு கழித்து தாமதமாக கொண்டு வரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த நவம்பர் 28ம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இங்கு 15 வருட பாஜக ஆட்சியை முடிவிற்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில்தான் அங்கு வாக்குபதிவு எந்திரங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதும், சில எந்திரங்கள் தாமதமாக வந்ததும் அம்பலமாகி உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

    இரண்டு நாள்

    இரண்டு நாள்

    போபால் அருகே இருக்கும் சாகர் பகுதியை ஒட்டிய இடங்களில் நடந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நேரடியாக, பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கு முன் தனியார் ஹோட்டல் ஒன்றில் பாதுகாப்பு இன்றி வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் இரண்டு நாட்கள் இப்படி வைக்கப்பட்டு இருக்கிறது.

    மிக மோசம்

    மிக மோசம்

    இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், தேர்தல் முடிந்த அன்று இரவே இந்த எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்துதான் கொண்டு வரப்பட்டது. அதோடு தனியார் பேருந்தில் பாதுகாப்பு இன்றி இந்த எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    மோசம்

    மோசம்

    இந்த நிலையில் அந்த சாகர் பகுதியில்தான் சுற்றுவட்டார பகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நேற்று ஒரு மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டு இருக்கிறது. மின்சார துண்டிப்பு காரணமாக நேற்று காலை 8.45 முதல் 9.45 வரை சிசிடிவி எடுக்கவில்லை. இங்கு எதுவும் பதிவாகிவில்லை என்றும் கூறியுள்ளது.

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    காங்கிரஸ் குற்றச்சாட்டு

    இந்த தொடர் சர்ச்சைகள் காரணமாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இரண்டு நாள் கழித்து ஏன் வாக்குப்பதிவு எந்திரம் வர வேண்டும், என்ன நடக்கிறது இந்தியாவில், தேர்தல் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள், எப்படி இது நடந்தது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இது பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Madhya Pradesh Assembly election: EVM tamppering allegations on the rise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X