For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேருவிற்கு நெருக்கம்.. காங்கிரஸின் தூண்.. ம.பியில் பாஜகவை வீழ்த்திய நாயகன்.. யார் இந்த கமல்நாத்?

மத்திய பிரதேச முதல்வராக பதவி ஏற்று இருக்கும் கமல்நாத் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு

    போபால்: மத்திய பிரதேச முதல்வராக பதவி ஏற்க இருக்கும் கமல்நாத் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

    72 வயது நிரம்பிய கமல்நாத் லோக் சபா உறுப்பினராக நீண்ட காலமாக இருக்கிறார். இவர் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்தார். இவர் தற்போது லோக் சபா எம்.பியாக உள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் இவர் வெற்றி பெற்றார்.

    மத்திய பிரதேசத்தில் சிந்த்வாரா தொகுதியில் இருந்து இவர் லோக் சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் அதே தொகுதியில் இருந்து மொத்தம் 9 முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

    ம.பி தலைவர்

    ம.பி தலைவர்

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டு இருந்த சமயத்தில் இவர் அம்மாநில காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இவர் கடந்த மே மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

    உழைப்பு

    உழைப்பு

    அவரின் கடினம் உழைப்பின் காரணமாக தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு வெற்றியை சுவைத்து இருக்கிறது. அதன் பலனாக தற்போது அவர் மத்திய பிரதேச மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய பிரதேசத்தின் இன்னொரு முக்கிய காங்கிரஸ் தலைவரா ஜோதிராதித்ய சிந்தியா உடன் போட்டியிட்டு இவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.

    அனுபவம்

    அனுபவம்

    பி.காம் படித்து இருக்கும் இவர் வனத்துறை அமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர், நகர அபிவிருத்தி துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்து இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக 2001-2004 வரை இருந்துள்ளார்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    சிறு வயதில் இருந்தே இவரது குடும்பம் காங்கிரஸ் குடும்பம் ஆகும். இவர் குடும்பம் நேருவின் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தது. பொருளாதாரத்தில் அதிக வல்லமை கொண்ட இவர் பொருளாதாரம் தொடர்பான சில விருதுகளையும் வாங்கியுள்ளார்.

    English summary
    Madhya Pradesh's new CM Kamal Nath is a long-term Congress member and a close friend of Nehru family.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X