For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த அதிரடிக்கு தயார் ஆகும் பாஜக.. உடனே ஆட்சியை கலைக்க முடிவு.. ம.பியில் சூடுபிடிக்கும் களம்!

மத்திய பிரதேச அரசியல் நிலையற்றதன்மை நிலவி வரும் நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச அரசியல் நிலையற்றதன்மை நிலவி வரும் நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.

Recommended Video

    Madhya Pradesh:ம.பியில் சூடுபிடிக்கும் களம்!..ஆட்சி கலையுமா?

    காங்கிரசில் இளம் மற்றும் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 23 பேர் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இதில் 22 எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதுதான் அங்கு அரசியல் மாற்றங்கள் நடக்க காரணம்.

    பலம் என்ன

    பலம் என்ன

    23 எம்எல்ஏக்கள் மொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் சட்டசபையில் 231 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருந்தனர்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் இருந்தனர். அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. தற்போது 23 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ் கூட்டணி பலம் 97 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலம் 90 ஆக குறையும். மொத்த அவையின் பலம் 198 ஆக மாறும்.

    பாஜக எம்எல்ஏக்கள்

    பாஜக எம்எல்ஏக்கள்

    இந்த நிலையில் பாஜக கட்சி தனது எம்எல்ஏக்களை எல்லாம் போபாலில் இருந்து வெளியேற்றி உள்ளது.
    போபாலில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்த 107 எம்எல்ஏக்களை பாஜக நேற்று இரவோடு இரவாக பேருந்து மூலம் வெளியேற்றியது. 5 சொகுசு பேருந்துகளில் இவர்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் ஹரியானாவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    ஹரியானா எங்கே

    ஹரியானா எங்கே

    ஹரியானா மாநிலம் குர்கானில் இருக்கும் ஐடிசி ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் எம்எல்ஏக்களை காங்கிரஸ் இழுக்க முயற்சிக்க கூடாது என்பதால் பாஜக இந்த செயலை செய்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வரும் மார்ச் 16ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதில் மத்திய பிரதேச அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன் கூட ஆட்சி கலைக்கப்பட வாய்ப்புள்ளது.

    மீண்டும் செல்கிறார்கள்

    மீண்டும் செல்கிறார்கள்

    இதற்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் தங்கள் திட்டத்திற்கு சிக்கல் எதுவும் வர கூடாது என்பதால் பாஜக தங்கள் எம்எல்ஏக்களை ஒன்றாக அழைத்து ஒரு இடத்தில் வைத்து இருக்கிறது. இதனால் இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் மீதம் இருக்கும் எம்எல்ஏக்களை சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு தனியார் ஹோட்டலில் இவர்கள் தங்க வைக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Madhya Pradesh: BJP took its MLAs to resort, may stake claim soon in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X