உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை... அதிரடி சட்டத்துக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல்!
போபால்: உணவுக் கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் புதிய மசோதாவுக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைக் கொல்லும்.
பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைக் கொல்லும். இதனால் உணவுப் பொருளில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு சட்டத்துக்கு மத்திய பிரதேச மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உணவு மற்றும் போதைப்பொருள் கலப்படத்தை கட்டுப்படுத்த உடனடி சட்டத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு சிவராஜ் சிங் தலைமையிலான அமைச்சரவை உணவுக் கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்க, 2021 தண்டனை சட்டம் (மத்திய பிரதேச திருத்தம்) மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் உணவுக் கலப்படத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உணவுக் கலப்பட அச்சுறுத்தலை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.