For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளக்காதலி வீட்டில் காவல்துறை அதிகாரி.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. அடுத்து நடந்த கொடூரம்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ்காரர் ஒருவர் கள்ளக்காதல் விவகாரத்தை எதிர்த்த தனது மனைவியை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் துறை உயர் அதிகாரி புருஷோத்தம் சர்மா. வேறொரு பெண்ணின் வீட்டில் இருந்துள்ளார். இதை கண்ட அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தம்பதியினரிடையே வாக்குவாதம் வெடித்துள்ளது. அதன்பின்னர் புருஷோத்தம் சர்மா தனது மனைவியை வீட்டிற்கு வந்து தாக்கியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், புருஷோத்தம் சர்மா தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்., அடுத்த சில நிமிடங்கள் கழித்து, அவர் மனைவியை கீழே தள்ளி கடுமையாக தாக்குகிறார். கீழே தள்ளப்பட்ட நிலையில் தன்னை விட்டுவிடுப்படி பலமுறை கெஞ்சுகிறார் அவரது மனைவி. ஆனாலும் தொடர்ந்து தாக்குகிறார்.

ஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடிஒரு நாட்டையே​ நம்பிக்கொண்டிருப்பது ஆபத்தானது.. சீனாவுக்கு மறைமுக குட்டு வைத்த மோடி

 தடுக்க முயற்சி

தடுக்க முயற்சி

அந்த வீடியோல் இரண்டு ஆண்கள் தெரிகிறார்கள். அவர்கள் சண்டையை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள். செல்ல நாய், தனது எஜமானியை அடிப்பதை எதிர்த்து குரைப்பதை பார்க்க முடிகிறது. புருஷோத்தம் சர்மாவின் கையில் காயம் இருப்பது வீடியோவில் தெரிகிறது, அவரது மனைவி கத்தியால் காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் அவரது மனைவி தற்காப்புக்காக கத்தரிக்கோலைப் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

 தந்தைக்கு எதிராக புகார்

தந்தைக்கு எதிராக புகார்

இந்நிலையில் டிஜிபி அதிகாரி மனைவியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலானது மத்திய பிரதேசத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வருமான வரித் துறையின் துணை கமிஷனராக உள்ள புருஷோத்தம் ஷர்மாவின் மகன் பார்த்த், இந்த தாக்குதலின் வீடியோவை மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் சில மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பி, தனது தந்தை மீது புகார் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இதனிடையே திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்ட சர்மா, தான் ஏதாவது தவறு செய்திருந்தால், என் மனைவி ஏன் என்னுடன் இவ்வளவு காலம் வாழ்ந்தார் என்று என் மகன் சொல்ல வேண்டும். "12-15 ஆண்டுகளில் இருந்து என்னிடமிருந்து) பணம் எடுத்துக்கொண்டு வெளிநாட்டுப் உல்லாசப் பயணங்கள் என் மனைவி ஏன் சென்றாள் என்பதையும் என் மகன் சொல்ல வேண்டும்" கூறினார்.

 நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனிடையே டிஜிபி அதிகாரி ஒருவர் மனைவியை கொடூரமாக தாக்கிய விஷயத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரே பெண் ஒருவரை கடுமையாக தாக்கியது தவறான வழிகாட்டுதலை தருகிறது. இது எங்களுக்கு கடுமையான கவலை அளிக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, வன்முறையில் ஈடுட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்..

 முதல்வர் அதிரடி உத்தரவு

முதல்வர் அதிரடி உத்தரவு

இதையடுத்து மத்திய மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், காவல் துறை உயர் அதிகாரி புருஷோத்தம் சர்மாவை உடனடியாக அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவருக்கு இப்போது காவல்துறையில் எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை. பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படி நடந்து கொள்ளலாமா என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்டித்துள்ளார். சட்டத்தை கையில் எடுத்தது தவறு என்று கூறியுள்ளார்.

English summary
Madhya Pradesh Director General of Police (Prosecution) Purushottam Sharma has been caught on camera beating his wife. The incident reportedly took place after Purushottam Sharma's wife found out about his alleged extra-marital affair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X