For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பிரதேசத்தில் புது டிவிஸ்ட்.. ஒரேயடியாக 120 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை.. பாஜக அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ம.பி.யில். காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி

    போபால்: மத்திய பிரதேசத்தில் தற்போது மொத்தமாக நிலைமை மாறி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனால் 15 வருடங்களுக்கு பின் ம.பியில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸுக்கு வாய்ப்பு கைகூடி வந்துள்ளது.

    தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும் கடந்த ஒரு மாதம் முழுக்க தேர்தல் நடந்தது. மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.

    Madhya Pradesh Election Results 2018: Who will get the crown? Results today

    இதில் அதிக கவனம் ஈர்த்த மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை.

    கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

    அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தற்போது முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகிறது.

    தற்போதைய நிலவரங்கள் படி மத்திய பிரதேசத்தில்,

    பாஜக: 99 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    காங்கிரஸ் : 120 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் மெஜாரிட்டி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் அளவுக்கு முன்னணி பெற்றுள்ளது என்பதால் பாஜக அதிர்ச்சியில் உள்ளது.

    English summary
    Madhya Pradesh Election Results 2018: The counting of votes will start in a few minutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X