For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து தர்மத்தை காக்கவில்லை.. ம.பி தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களமிறங்கும் இந்து சாமியார்கள்!

மத்திய பிரதேச தேர்தலில் புதிய திருப்பமாக பாஜக கட்சிக்கு எதிராக நிறைய இந்து சாமியார்கள், குருமார்கள் தேர்தலில் களம் குதித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச தேர்தலில் புதிய திருப்பமாக பாஜக கட்சிக்கு எதிராக நிறைய இந்து சாமியார்கள், குருமார்கள் தேர்தலில் களம் குதித்து இருக்கிறார்கள்.

இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இதனால் தற்போது பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக மத்திய பிரதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த சாமியார்கள் பலர் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களமிறங்கி உள்ளனர்..

பாஜக - அதிமுக உறவை மறைக்கவே தம்பிதுரை குற்றச்சாட்டு... திருநாவுக்கரசர் விமர்சனம்! பாஜக - அதிமுக உறவை மறைக்கவே தம்பிதுரை குற்றச்சாட்டு... திருநாவுக்கரசர் விமர்சனம்!

கட்சி தொடங்கும் சாமியார்

கட்சி தொடங்கும் சாமியார்

சாஞ்சி வீராசாத் என்ற கட்சி மத்திய பிரதேச தேர்தலில் முக்கிய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இந்த கட்சி சார்பாக மொத்தம் 50 இந்து சாமியார்கள் தேர்தலில் நிற்கிறார்கள். முக்கியமாக மத்திய பிரதேசத்தில் அதிக பக்தர்களை கொண்டு இருக்கும் சாமியார் குருசரன் சர்மா இந்த 50 சாமியார்களையும் முன்னிலையில் நின்று வழி நடத்த உள்ளார். இவரும் தேர்தலில் நிற்கிறார்.

எதிரியான கம்ப்யூட்டர் பாபா

எதிரியான கம்ப்யூட்டர் பாபா

மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சிக்கு பெரிய உதவியாக இருந்த கம்ப்யூட்டர் பாபா எனப்படும் நம்தியோ தாஸ் தியாகி பாஜகவிற்கு எதிராக களமிறங்க உள்ளார். பாஜகவிற்கு ஆதரவு அளித்து வந்த இவர் பாஜகவின் ஆட்சியை வெறுக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார். அதே சமயம் இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

யாருக்கு எதிர்

யாருக்கு எதிர்

இவர்கள் மட்டுமில்லாமல் தேவகி நந்தன் தாக்குர், வைஷ்ணவ சாமியார் உள்ளிட்ட நிறைய சாமியார்கள் அங்கு தேர்தலில் நிற்கிறார்கள். குறைந்த பட்சம் 100 சாமியார்களாவது இந்த தேர்தலில் நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பாஜக கட்சிக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்ய போவதாக கூறியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

பாஜக கட்சி இந்து மதத்தை ஏமாற்றிவிட்டதாக அந்த சாமியார்கள் கூறுகிறார்கள். மிக மோசமான ஆட்சியை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் வழங்கியுள்ளார். நாட்டில் தவறுகள் நடக்கும் போது சாமியார்கள் வெளியே வந்து மக்களை காக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் இப்போது தேர்தலில் நிற்கிறோம், பாஜகவை தோற்க அடிப்பதே எங்கள் நோக்கம் என்றுள்ளனர்.

English summary
Political battleground in Madhya Pradesh is witnessing several fringe players trying to come to the fore but will they be able to make any mark or not could only be told after elections of the Madhya Pradesh Assembly are over. Many religious and spiritual leaders are at the loggerhead with the government just before the Assembly elections in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X