For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா நெகட்டிவ்.. "ஹோ ஸிந்த்தா கார்கே..".. சுஷாந்தின் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடிய நோயாளிகள்- வீடியோ

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பிய போது கோவிட் கேர் சென்டரில் டான்ஸ் ஆடி உற்சாகமாக வீடு திரும்பினர்.

கொரோனா என்பது ஒரு உயிர் கொல்லி. இது இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போருக்கும் உயிர்பலியை ஏற்படுத்துகிறது.

ஆனால் கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவுக்கான அமைக்கப்பட்ட கோவிட் சென்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை! மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கும் கனமழை!

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் பாட்டம்

இவர்களுக்கு காலை பானங்கள் முதற்கொண்டு டிபன், ஸ்னாக்ஸ், மதிய உணவு, மீண்டும் ஸ்னாக்ஸ், உற்சாக பானம், இரவு டிபன் வரை இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. கோவிட் கேர் சென்டரில் நண்பர்களை பிடித்துக் கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிலர் ஜாலியாக இருக்கிறார்கள்.

கழிப்பறைகள்

கழிப்பறைகள்

சீட்டு கட்டு, கபடி, கிரிக்கெட், ஸ்கிப்பிங் உள்ளிட்ட விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். ஏதோ பிக்னிக் வந்தது போன்ற உணர்வை பார்க்கும் நமக்கு தருகிறார்கள். அதே நேரத்தில் சில கோவிட் சென்டர்களில் உணவு சரியில்லை, சுத்தம் இல்லை, கழிப்பறைகள் சரியில்லை என்ற புகார்களும் வருகின்றன.

நெகட்டிவ்

நெகட்டிவ்

இந்த நிலையில் போபால் நகரில் கட்னி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவர்களுக்கு நெகட்டிவ் என வந்துவிட்டது.

Recommended Video

    Modi அருகில் நின்றவருக்கு Corona |Ram Temple Trust Head Tests Covid +ve In Ayodhya | Oneindia Tamil
    வீடு திரும்பும் போது

    வீடு திரும்பும் போது

    இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சுஷாந்த் சிங் நடித்த சிச்சோரே படத்தில் வரும் சின்டா கார்கே க்யா பயேகா என்ற பாடலுக்கு நடனம் ஆடினர். இவர்களின் ஆட்டம் பாட்டம் மற்ற நோயாளிகளுக்கு புத்துணர்வையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.

    English summary
    Madhya Pradesh family of 8 dances in hospital after they tested negative for Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X