For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் சிக்குகிறார் பிரக்யா சிங்.. சுனில் ஜோஷி கொலை வழக்கை தூசு தட்டுகிறது மத்திய பிரதேச அரசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Sadhvi Pragya Singh Thakur: எதையாவது சர்ச்சையாக பேசி பாஜகவுக்கு தலைவலியாக மாறும் பிரக்யா!- வீடியோ

    போபால்: பாஜக லோக்சபா வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மீண்டும் ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு பள்ளி வாசல் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர் பெண் சாமியாரும் பாஜகவின் போபால் லோக்சபா தொகுதி வேட்பளருமான பிரக்யா சிங் தாக்கூர். இவர் மீதான இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    பரபரக்கும் டெல்லி.. ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்... கனிமொழியும் பங்கேற்பு பரபரக்கும் டெல்லி.. ஒன்றுகூடிய 21 எதிர்கட்சி தலைவர்கள்... கனிமொழியும் பங்கேற்பு

    சுனில் ஜோஷி கொலை

    சுனில் ஜோஷி கொலை

    அது மட்டுமின்றி கடந்த 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி அதே ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கருத்துவேறுபாட்டால் கொலை

    கருத்துவேறுபாட்டால் கொலை

    இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு ஏஜென்சி சுனில்ஜோஷி படுகொலைக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தது. அதேநேரத்தில் பெண் சாமியாரான பிரக்யா சிங்குடனான கருத்துவேறுபாட்டால் சுனில் ஜோஷி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    8 பேரும் விடுவிப்பு

    8 பேரும் விடுவிப்பு

    இதுதொடர்பாக பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என கூறி பிரக்யா சிங் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    தூசு தட்டும் அரசு

    தூசு தட்டும் அரசு

    இந்நிலையில் இந்த வழக்கை மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தற்போது தூசு தட்டுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு எதிர்க்கட்சியான பாஜக நேற்று கடிதம் எழுதியது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    புதிய பிரச்சனை

    புதிய பிரச்சனை

    மத்தியபிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங், பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பிரக்யா சிங் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியதற்காக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஃபிரஷ்ஷாக ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் பிரக்யா சிங்.

    English summary
    Madhya Pradesh government has decided to reopen the murder case of RSS pracharak Sunil Joshi which is related to BJP candidate Pragya Singh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X