For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி

Google Oneindia Tamil News

போபால்: நள்ளிரவில் நீதிபதியின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர்கள், நீதிபதியை சிறைபிடித்து மிரட்டிய நிலையில், அவரிடம் வெறும் 500 ரூபாய் மட்டுமே இந்ததால் அவரிடம் இருந்த 500 ரூபாயை பிடுங்கிக்கொண்டு தப்பி ஒடிவிட்டனர். இச்சம்பவம் ம்த்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் சிறப்பு நீதிபதியாக இருப்பவர் சுரேந்தர்குமார். இவர் சப்பாஹா காலனியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். அவருடன் இருக்கும் சென்டரி நேற்று விடுமுறையில் இருந்துள்ளார். பியூன் மட்டும் உடன் இருந்துள்ளார்.

madhya pradesh judge held captive, Armed robbers decamp with Rs 500 cash

புதன்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நீதிபதி சுரேந்தர்குமார் வீட்டில் கண் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் ஆயுதங்களுடன் 3 முதல் 4 கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் பியூன் தூங்கி கொண்டிருந்த அறையின் கதவை மூடினர்.

பின்னர் அவர்கள் நீதிபதி சுரேந்தரை சிறைபிடித்தனர். அவர் மிரட்டி உட்கார வைத்து வீடு முழுவதும் பணம் மற்றும் நகைகள் இருக்கிறதா தேடினர். ஆனால் எதுவுமே வீட்டில் இல்லை. இதையடுத்து நீதிபதியிடம் இருந்து 500 ரூபாய் பணத்தை மட்டும் பிடுங்கி கொண்டு அவரை விட்டுவிட்டு வீட்டில் இருந்து தப்பிஓடிவிட்டனர்.

மன்னார்குடியில்.. நடு ரோட்டில்.. வியர்க்க விறுவிறுக்க.. நவீன மன்னார்குடியில்.. நடு ரோட்டில்.. வியர்க்க விறுவிறுக்க.. நவீன "டிராபிக் ராமசாமி".. மக்கள் ஆச்சரியம்!

கொள்ளையர்கள் வீட்டைவிட்டு போன பின்னர் நீதிபதி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். நீதிபதி பணத்தை ரொக்கமாக வைத்திருக்கவில்லை என்பதால் 500 ரூபாய் மட்டுமே கொள்ளை போனதாக உமரியா மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சச்சின் சர்மா தெரிவித்தார்.

English summary
madhya pradesh Umaria judge Surendra Kumar held captive, Robbers left the house with Rs 500 cash
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X