• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

'கவர்னர் வந்தார்,போட்டோ எடுத்தாங்க.. இப்போ ரூ 14,000 பில் கட்ட சொல்றாங்க..' புலம்பும் ம.பி இளைஞர்

Google Oneindia Tamil News

போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டின் சாவியை ஆளுநர் வழங்கினார். ஆனால், அதற்குப் பிறகு தான் ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசையில் வசித்து வந்தவர் புத்ராம் ஆதிவாசி.

அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்! அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!

இவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிமெண்ட் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசம்


குறிப்பாக, இந்த வீட்டின் சாவியை அம்மாநில ஆளுநர் மங்குபாய் சி படலே நேரடியாக புத்ராம் ஆதிவாசியின் புதிய வீட்டிற்குச் சென்று சாவியை வழங்கினார். மேலும், அங்கு அவருடன் இணைந்து உணரும் சாப்பிட்டார். மாநிலத்தின் ஆளுநரே தனது வீட்டிற்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் புத்ராம் ஆதிவாசி! இருப்பினும், அந்த மகிழ்ச்சி வெறும் சில காலம் மட்டுமே அவருக்கு நீட்டித்தது. ஆளுநரின் வருக்கை மிகப் பெரிய சுமையை தனக்குத் தரும் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

 மாஸ் காட்டிய ஆளுநர்

மாஸ் காட்டிய ஆளுநர்

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ம.பி. ஆளுநர் மங்குபாய் சி படலே புதிதாகக் கட்டப்பட்ட புத்ராம் ஆதிவாசியின் சிமெண்ட் வீட்டிற்கு வந்திருந்தார். ஆளுநர் முன்னிலையில் தான் கிரஹ பிரவேஷம் நடைபெற்றது. அப்போது தான் அவரது வீட்டிலேயே ஆளுநர் மதிய உணவையும் சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. சொல்லப்போனால் அந்த வாரம் முழுக்க ம.பி. கவர்னரின் இந்த எளிமை தான் பேச்சாகவே இருந்தது.

 அடுத்து வந்த அதிர்ச்சி

அடுத்து வந்த அதிர்ச்சி

இருப்பினும், கவர்னர் அவரது வீட்டிற்கு வருவதற்கு முன்பு கிராமம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் புத்ராம் ஆதிவாசியின் சாதாரண வீட்டிற்கு ஒரு ஆடம்பரமான புதிய கேட் மற்றும் மின்விசிறிகளைப் பொருத்தினர். வீட்டுடன் சேர்த்து புதிய கதவும் மின்விசிறிகளும் கிடைப்பதைப் பார்த்து புத்ராம் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அதன் பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது. போட்டோக்கள் எல்லாம் எடுத்து முடித்து, கவர்னரும் கிளம்பிய மறுநாள் உள்ளூர் அதிகாரிகள் ஒரு பெரிய பில்லை புத்ராத்திடம் கொடுத்துள்ளனர்.

 பில்லை கட்டுங்க

பில்லை கட்டுங்க

அதில் புதிய கேட் மற்றும் மின்விசிறிகளுக்காக புத்ரம் ரூ 14,000 கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இது தொடர்பாக அவர் என்டிடிவி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "சில அதிகாரிகள் வந்தார்கள். கவர்னர் இங்கேயே மதிய உணவு சாப்பிடுவார் என்றார்கள். ரூ 14,000 செலவில் புதிய கேட் பொருத்தப்பட்டது. இப்போது என்னிடம் இல்லாத பணத்தைக் கேட்கிறார்கள். முன்னரே கூறியிருந்தால் அப்போதே நான் இந்த கேட்டை வேண்டாம் எனக் கூறியிருப்பேன்" என்றார்.

 காங்கிரஸ் அட்டாக்

காங்கிரஸ் அட்டாக்

மேலும் புத்ராமின் புதிய வீட்டிற்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த செய்தி வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், காங்கிரஸ் கட்சி இதற்கு ம.பி அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது. ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.

 அமைச்சர் விளக்கம்

அமைச்சர் விளக்கம்

இந்நிலையில் இது தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் கூறுகையில், "'இது நடந்திருக்கக் கூடாது. இது ஆளுநரின் கண்ணியத்திற்கு எதிரானது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டிற்கு விருந்தினர் வந்தால், வீட்டை அலங்கரிப்பது வழக்கம் அப்படி தான் இது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரிடம் பணம் கேட்பது தவறு" என்று கூறினார்.

English summary
Madhya Pradesh Man Gets a bill ₹ 14,000 bill for fans and door after governor visit. MP youth got house from governor in Pradhan Mantri Awas Yojana scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X