For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாட்டினா கைல கம்பு வச்சிட்டு.. கண்ணு தெரியாம கஷ்டப்படுறவங்கனு நினைச்சீங்களா.. இவங்க வேற லெவல்!

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டியின் ஓவியங்கள் இத்தாலியில் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள லோஹா எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதையா பாய் பைகா. 80 வயதான ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இந்த மூதாட்டிக்கு ஓவியங்கள் தீட்டுவது மட்டும் தான் ஒரே வேலை.

கண்களால் பார்க்கும் அனைத்தையும் ஓவியங்களாக தீட்டுகிறார் இந்த மூதாட்டி. 40 வருடங்களுக்கு முன்னர் தனது கணவர் இறந்தபோது, அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்காக ஓவியம் வரைய பழகியிருக்கிறார். அதுவே இன்று அவருடைய அடையாளமாக மாறிவிட்டது.

madhya pradesh old womans paintings displayed in italy

"எல்லா வகையான விலங்குகள் மற்றும் என்னை சுற்றி நான் பார்க்கும் விஷயங்களைத் தான் வரைவேன். ஓவியங்களுக்காகவே இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இப்போதெல்லாம் நான் ஓவியங்கள் வரைவதை தவிர்த்து நான் வேறு ஏதும் செய்வதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்தபோது தான் வரைய தொடங்கினேன். எனது வாழ்வாதாரத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் இதை தான் செய்து வருகிறேன்", என்கிறார் ஜோதையா.

தன்னுடைய ஓவியங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் ஜோதையாவுக்கு பெரும் மகிழ்ச்சி. இனி தொடர்ந்து நிறைய ஓவியங்கள் வரைவேன் என்கிறார் இந்த மூதாட்டி. இவரால் இவரது கிராமத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளது. இதனால் ஜோதையாவை கொண்டாடி வருகிறாகள் அவர்கள்.

English summary
The paintings of a 80 years old woman from a tribal village in Madhya Pradesh is being displayed in Italy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X