For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட்.. போலீஸ் வெளியிட்ட வைரல் வீடியோ.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே!

Google Oneindia Tamil News

போபால்: படங்களில் வருவது போல ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட் செய்த மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாடு முழுக்க போலீசார் செய்யும் செயல்கள் பல வைரலாகி வருகிறது. டிரோன் பறக்கவிட்டு குற்றவாளிகளை, லாக்டவுனை அத்துமீறும் நபர்களை பிடிப்பது தொடங்கி சாலையில் சுற்றுபவர்களுக்கு சங்கு ஊதுவது வரை பல விஷயங்களை போலீசார் செய்கிறார்கள்.

Madhya Pradesh police got relieved of his charge after pulling off danger car stunt

இந்த வீடியோக்கள் எல்லாம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதேபோல் ஒரு வீடியோவை உருவாக்கிய போலீஸ் ஒருவர் பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். படங்களில் வருவது போல ஓடும் கார் மீது நின்று ஸ்டண்ட் செய்த அந்த மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த டாமோ பகுதி துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ்தான் இந்த சர்ச்சைக்கு சொந்தக்காரர். அஜய் தேவ்கான் நடித்த இந்தி படமான சிங்கம் படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு இவர் வீடியோ வெளியிட்டு இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். மிக மெதுவாக செல்லும் இரண்டு கார்கள் மீது இவர் கால்களை வைத்து சாகசம் செய்துள்ளார்.

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் விவேக் எப்படி இரண்டு பைக் மீது இரண்டு கால்களை வைத்து பயணம் செய்வாரே அதேபோல் இவர் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலானது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்ய தொடங்கினார்கள்.

ஆனால் இதை சாகர் பகுதி கமிஷனர் அணில் சர்மா மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டார். டமோ பகுதி போலீஸ் தலைவரிடம் உடனே துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதனால் உடனே தற்போது துணை ஆய்வாளர் மனோஜ் யாதவ் அவரின் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

மணிவண்ணன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.. வைரலாகும் #BringBackManivannanமணிவண்ணன் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்.. வைரலாகும் #BringBackManivannan

அதோடு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறியதற்காக 5000 ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த வீடியோ இப்போதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

English summary
Madhya Pradesh police got relieved of his charge after pulling off danger car stunt to become viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X