For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்டவாளத்தில் உயிருக்கு போராடிய நபர்.. 2 கிமீ தூக்கி சென்று காப்பாற்றிய போலீஸ்.. உறையவைக்கும் வீடியோ

மத்திய பிரதேசத்தில் காயம்பட்ட நபர் ஒருவரை ரயில்வே தண்டவாளத்தில் 2 கிமீ தூரம் தூக்கி சென்ற காப்பாற்றிய போலீஸ் ஒருவரின் வீடியோ வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விபத்தில் அடிபட்டவரை 2 கி.மி.தூக்கி சென்று உயிரை காப்பாற்றிய போலீஸ்

    போபால்: மத்திய பிரதேசத்தில் காயம்பட்ட நபர் ஒருவரை ரயில்வே தண்டவாளத்தில் 2 கிமீ தூரம் தூக்கி சென்ற காப்பாற்றிய போலீஸ் ஒருவரின் வீடியோ வைரலாகி உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் போலீஸ் படையின் அவசர கால உதவிப்பிரிவில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் பூனம்சந்த் பில்லோர். இவருக்கு நேற்று பணியில் இருந்த போதுதான் அந்த கால் வந்தது. பக்தால் ரயில்நிலையம் அருகே ஒரு நபர் அடிபட்டு கிடக்கிறார் உடனே வர முடியுமா என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    அஜித் என்ற 22 வயது நபர், நேற்று ரயிலில் சென்று கொண்டு இருக்கும் போது, பக்தால் ரயில்நிலையத்தில் இருந்து சில கிமீ தொலைவில் இருக்கும் நேரத்தில் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

    போராடினார்

    போராடினார்

    இந்த நிலையில் உயிருக்கு போராடியபடி அவர் அங்கேயே கிடந்து உள்ளார். அவருக்கு கை, கால்களில் மிக மோசமாக அடிப்பட்டு இருக்கிறது. கூட்டம் காரணமாக படியில் தொங்கி கொண்டு சென்றவர், கால் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்து உள்ளார்.

    ஆம்புலன்ஸ் செல்ல முடியாது

    ஆம்புலன்ஸ் செல்ல முடியாது

    ஆனால் அவர் விழுந்து இடம் ரயில் தண்டவாளம் இருக்கும் பகுதி என்பதாலும், சாலையே இல்லாத பகுதி என்பதாலும் அங்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. இதனால் அந்த போலீஸ் அதிகாரி பூனம்சந்த் பில்லோர் மட்டும் தனி ஆளாக அங்கு சென்றுள்ளார். பூனம்சந்த் பில்லோர் தனியாக நடந்து சென்று அஜித்தை காப்பாற்றி இருக்கிறார்.

    எவ்வளவு தூரம்

    மொத்தம் 2 கிமீ தூரம் அஜித்தை தூக்கிக் கொண்டு நடந்தே வந்து இருக்கிறார் பூனம்சந்த் பில்லோர். கற்கள் நிறைந்த தண்டவாள பாதையில் 22 வயது நபரை தூக்கிக் கொண்டு நடந்தே வந்துள்ளார். அதன்பின் ரயில்வே கேட்டில் தயாராக இருந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    நன்றாக இருக்கிறார்

    நன்றாக இருக்கிறார்

    தற்போது அந்த இளைஞர் அஜித் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது. பலரும் அந்த போலீஸ் அதிகாரியின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    Poonamchand Billore was posted on a First Response Vehicle (FRV), a GPS-fitted vehicle that attends to police-related emergencies, when it got a call from a state-level control room about a passenger having fallen from a moving train near Pagdhal railway station under Shivpur Police Station around 8.45 am.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X