For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் பிரச்சனை.. ம.பி. சட்டசபை ஒத்திவைப்பு.. நம்பிக்கை வாக்கெடுப்பு அம்பேல்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,. சட்டசபை நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் சட்டசபையில் 26ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை.

Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி.... அமெரிக்கா இன்று பரிசோதனை

    மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து கமல்நாத் 6 அமைச்சர்களையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், பாஜக பிடியில் உள்ள எம்எல்ஏக்களை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார்.

    ராஜினாமா கடிதம்

    ராஜினாமா கடிதம்

    இதையடுத்து முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் கடிதம் அனுப்பி உள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் ஊடகத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்கள். கடந்த 16ம்தேதி அன்று அவர்கள் எனக்கு தனியாகவும் கடிதம் அனுப்பினார்கள். அந்த கடிதத்தில் அவர்கள் என்னிடம், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    அரசியல் சாசன சட்டப்பிரிவு 174 மற்றும் 175(2)ன்படி மத்திய பிரதேச சட்டசபையை இன்று கூட்ட எனக்கு அதிகாரம் உள்ளது எனவே எனது உரையுடன் சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும். அது முடிந்ததும் செய்ய வேண்டிய ஒரே வேலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது. வாக்குகள் அடிப்படையில் நடைபெறறு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ எடுக்க வேண்டும். எக்காரணம் கொடுக்கும் தாமதிக்கவோ நிறுத்திவைக்கவோ கூடாது என்று உத்தரவிட்டார்.

    கட்சிகள் பலம் என்ன

    கட்சிகள் பலம் என்ன

    தற்போதைய நிலையில் மத்திய பிரதேசத்தில் மொத்தஇடங்கள் 230. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 108 இடங்கள் உள்ளன. பாஜகவுக்கு 107 இடங்கள் உள்ளன., சுயேட்சைகள் 4 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடத்திலும், சமாஜ்வாதி 1 இடத்திலும் காலியிடம் 8 ஆகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்துள்ளனர். இதில் 6அமைச்சர்களின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. 16 எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.

    காங்கிரஸ் பலம்

    காங்கிரஸ் பலம்

    தற்போதைய நிலையில் சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆக குறைந்துள்ளது. இப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தற்போது 92 எம்எல்ஏக்களின் ஆதரவு தான் உறுதியாக உள்ளது. சுயேட்சைகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியவற்றை சேர்த்தாலும் 99 தான் வருகிறது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை ஒட்டி இன்று போபாலில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இன்று இல்லை

    இன்று இல்லை

    இதனிடையே திடீர் திருப்பமாக சட்டசபை நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எதுவும் இல்லை எனவே. வாக்கெடுப்பது நடப்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சயை காரணம் காட்டி சபாநாயகர் மத்திய பிரதேச சட்டசபையை வரும் 26ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். இதன் காரணமாக கமல்நாத் அரசு தற்காலிகமாக தப்பி உள்ளது.

    English summary
    Madhya Pradesh political crisis : floor test will be conducted today at the state assembly . Ahead of floor test, 144 imposed in Bhopal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X