For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாவி ஓடி வந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு திடுக்குன்னு வாழ்வு.. ஆதரவாளர்களுக்கு பதவிகள்.. பாஜக பிளான்

Google Oneindia Tamil News

போபால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி வந்த ஜோதிராதித்ய சிந்தியா தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.

ஒரு வருட காத்திருப்புக்கு பிறகு அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அதேநேரம் மத்திய பிரதேச மாநிலத்தில் அவரது ஆதரவாளர்களுக்கு பல முக்கிய பதவிகளை கொடுத்து குளிர் வைப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

Madhya Pradesh politics: Jyotiraditya Scindia supporters will get Lion share of appointments

சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்திய பிரதேசத்தில் பாஜக வலுவான கட்சியாக தான் இருக்கிறது. இருப்பினும் இளம் தலைவர்களை கொண்டுவந்து மேலும் வலுவூட்டுவதற்காக காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த சிந்தியாவை தங்கள் பக்கம் இழுப்பது வெற்றி கண்டது பாஜக .

அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓர் ஆண்டுகள் கழித்து சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விஸ்தரிப்பில்தான் பதவி கிடைத்தது.

உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு ஜோதிராதித்ய சிந்தியாவை, திருப்திப்படுத்துவதற்காக அவருக்கு நெருக்கமானவர்களுக்கு வாரியத் தலைவர், கழகத் தலைவர் நிறைய பதவிகளை வாரி வழங்குவதற்கு பாஜக தலைமை தயாராகி வருகிறது.

கொரோனா நோய் பரவல் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பாஜக, தேர்தலுக்கு இப்போது இருந்தே தயாராகி வருகிறது. கடந்த சனிக்கிழமை டெல்லிக்கு வரைந்த முதல்வர் சிவராஜ் சவுகான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகள் தருவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதேநேரம் அந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை வெளியே தெரிவிக்காமல் ரகசியம் பாதுகாப்பதிலும் சிவராஜ் சவுகான் வெற்றிபெற்றுள்ளார். என்னதான் மறைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளியே வந்துதான் தீர வேண்டும் என்பது போல அமித் ஷாவுடனான, சிவராஜ் சவுகான் ஆலோசனை கூட்டத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்கள் மற்றும் பிறரை திருப்திப்படுத்துவது எப்படி என்பது பற்றி தான் ஆலோசிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில சுயேட்சைகளுடன், சிந்தியா ஆதரவாளர்கள், ஜஸ்மந்த் ஜாதவ், ரக்ஷா சிரோனியா, முன்னால் கோயல், இமர்தி தேவி, மனோஜ் சவுத்ரி மற்றும் பலர், பட்டியலில் இடம் பெறலாம். சிந்தியா ஆதரவாளர்கள் ஐடல் சிங் காஞ்சனா, கிரிராஜ் தண்டோடியா, ரகுராஜ் சிங் காஞ்சனா மற்றும் ரன்வீர் ஜாதவ் ஆகியோரும் அரசியல் நீரோட்டத்திற்கு திரும்ப காத்திருக்கிறார்கள். பின்னர் அரசியல் நியமனங்களைப் பெற வாய்ப்புள்ளது.

மத்திய பிரதேச அரசியல் ஆய்வாளர், ஒருவர் கூறுகையில், இது சிந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தாக பார்க்கப்படலாம் என்கிறார். குறிப்பாக அவர் மோடி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக உயர்ந்த பிறகு வருத்தத்தில் இருக்கும் தலைவர்களை திருப்திப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

English summary
Jyotiraditya scindia supporters will get posts in Madhya Pradesh as BJP is preparing for civic polls which the date yet to be announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X