For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் காந்தியின் ம.பி ஊர்வலத்தில் வெடித்த ஹீலியம் குண்டு.. பரபரப்பு வீடியோ!

மத்திய பிரதேசத்தில் பேரணி நடத்திய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்திற்கு அருகே பலூன் ஒன்று பெரிய அளவில் வெடித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் பேரணி நடத்திய போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்திற்கு அருகே ஹீலியம் பலூன் ஒன்று பெரிய அளவில் வெடித்து இருக்கிறது.

தற்போது இந்தியா ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக பரபரப்பாகி உள்ளது. தெலுங்கானா, மத்திய பிரதேம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இதனால் தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி நடத்திய ஊர்வலத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

[மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. மக்கள் அதிர்ச்சி!]

என்ன நடந்தது

என்ன நடந்தது

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் என்ற பகுதியில் பேரணி நடத்திய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ராகுல் காந்தி தன்னுடைய வாகனத்தில் வரும் போது அங்கு அருகில் இருந்த ஹீலியம் பலூன் வெடித்துள்ளது. மிகப்பெரிய சத்தத்துடன் இந்த பலூன் வெடித்து இருக்கிறது.

வீடியோ வெளியானது

இந்த பலூன் வெடிப்பது அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் இருந்து பெரிய அளவில் நெருப்பு வந்து உள்ளது. ஹீலியம் என்பதால் கண்ணை கூசும் வகையில் நெருப்பு வந்து உள்ளது. இதனால் அங்கு இருந் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

எப்படி

எப்படி

ராகுல் காந்திக்கு ஆரத்தி எடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தீபம் பட்டு இந்த பலூன் தீ பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இது வெடித்து சிதறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக இதுதான் காரணமாக என்று விவரம் வெளியாகவில்லை.

கேள்விக்குறி

கேள்விக்குறி

இது ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது அவருக்கு சரியாக பாதுகாப்பு வழங்கப்படவில்லை. நேற்று நடந்த இந்த சம்பவத்தில் ராகுல் காந்திக்கு காயமும் ஏற்படவில்லை.

English summary
Madhya Pradesh: Rahul Gandhi escaped from a Helium Balloon explosion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X