For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி. பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும்போது யெஸ் சாருக்கு தடை- ஜெய்ஹிந்த் சொல்ல உத்தரவு

மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது ஜெய்ஹிந்த் என கூற உத்தரவிடப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சாட்னா: மத்திய பிரதேச அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என மாணவர்கள் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Madhya Pradesh students to answer roll call with Jai Hind

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில கல்வித் துறை அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் வருகை பதிவை வாசிக்கும் போது யெஸ் சார், மேடம் என சொல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக மாணவர்கள் ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும்.

இது வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இது நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு விஜய் ஷா கூறினார்,

English summary
Madhya Pradesh School Education Minister Vijay Shah said that the Students of government schools in Satna district will say Jai Hind when they answer the roll call from Oct 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X