3 பெண்களுடன் குடித்தனம்! மச்சக்கார மவுரியா.. ஒரே மேடையில் மூவருடன் கல்யாணம்.. 90ஸ் கிட்ஸ் புகைச்சல்!
போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் நான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராத் மவுரியா. இவர் அந்த கிராமத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர்.
இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவருக்கு ஒரே மேடையில் மூன்று பெண்களுடன் திருமணம் நடந்தது. 6 குழந்தைகளும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். என்ன 90ஸ் கிட்ஸ் கண்களில் ரத்தம் வருகிறதா?
ச்சீ.. பெண்கள் தொழுகை நடத்திய மசூதிக்குள் புகுந்து..அட்டூழியம் செய்த இளைஞர்.. கர்நாடகாவில் பரபரப்பு

3 பெண்கள்
3 பெண்களை எப்படி உஷார் செய்தார் என்பது குறித்தும் மவுரியாவே தெரிவித்துள்ளார். அதை பார்ப்போம். இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது 3 பெண்களை காதலித்தாராம். அவர்கள் மூன்று பேரையும் இவருக்கு பிடித்துவிட்டதால் யாரையும் கைவிட மனமில்லையாம். இதனால் வாழ்ந்தால் 3பேருடன் வாழ வேண்டும் என முடிவு செய்தாராம்.

பழங்குடியினர்
பின்னர் ஒவ்வொருத்துடனும் தனித்தனியே வசித்து வந்தாராம். பழங்குடியினத்தினரின் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் ஒரு ஆண் பல பெண்களுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவு கொள்ள குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி இருக்கிறதாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ள அனுமதி கிடையாதாம்.

3 பெண்களுடன் 6 குழந்தைகள்
அதன்படி 3 பெண்களுடன் குடும்பம் நடத்திய மவுரியாவுக்கு 6 குழந்தைகள். 3 மனைவிகள், 6 குழந்தைகள் என இருந்தாலும் இவரால் குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை. அவர் சமூகம் சார்ந்த சடங்குகளில் கலந்து கொள்ள இயலவில்லையாம். இதனால் எபப்டியாவது மூன்று பேரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மவுரியா நினைத்தாராம்.

15 ஆண்டுகள்
இதற்கேற்ப கிட்டதட்ட 15 ஆண்டுகளாக அவர்களுடன் குடித்தனம் நடத்திய மவுரியா, தற்போது அவருக்கு 42 ஆவது வயதில் ஒரே மேடையில் 3 பெண்களையும் அவர்களது சமூகத்து முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு உறவினர்கள் புடைச்சூழ வந்திருந்தனர்.

3 பெண்களுடன் 15 ஆண்டுகளாக குடித்தனம்
அதிலும் இவர் ஏழ்மை நிலையில் இருந்ததால் அந்த 3 பெண்களையும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்கிறார். 342 ஆவது அரசியலமைப்புச் சட்டம் பழங்குடியினரின் சடங்குகள் சமூக பாரம்பரியங்களை பாதுகாப்பது குறித்து விளக்குகிறது. இந்த சட்டத்தின் படி மவுரியாவின் திருமணம் செல்லும். மச்சக்காரர்தான்பா நீ என இந்த செய்தியை படிப்போர் சொல்வது எங்கள் காதுகளில் விழுகிறது பாஸ்!